April 22, 2012

d - தொகுதித் தனிமங்கள் (d – Block Elements) ஒரு மதிப்பெண்

1. ஓர் உலோகம் ஆரோ சயனைடு அணைவிலிருந்து கோல்டை வீழ்படிவாக்குகிறது
அ) Cr                          ஆ) Ag                    இ) Pt                             ஈ) Zn
2. போர்டோக் கலவையில் உள்ளது
அ) AgNO3 + HNO3                                  ஆ) ZnSO4 + H2SO4 
இ) CuSO4 + Ca(OH)2                              ஈ) KMnO4 + HCl
3. காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
அ) குப்ரைட்      ஆ) காப்பர் கிளான்ஸ்    இ) மாலகைட்        ஈ) காப்பர் பைரைட்டுகள்
4. ஃபெர்ரோகுரோம் உலோகக் கலவை
அ) Cr, C, Fe, N        ஆ) Cr, Co, Ni, C       இ) Fe, C                    ஈ) Cr, Ni, Fe.
5. சேர்மங்கள் எதை கொண்டிருக்கும் பொழுது நிறமுள்ள அயனிகளை உருவாக்குகின்றன? அ) இரட்டை எலக்ட்ரான்கள்                    ஆ) தனித்த எலக்ட்ரான்கள் இ) தனித்த ஜோடி எலக்ட்ரான்கள்           ஈ) இவற்றில் எதுவுமில்லை
6. காந்தத் திருப்புத் திறனின் மதிப்பு 5.92 BM – எனில், தனித்த  எலக்ட்ரான்களின்  எண்ணிக்கை 
அ) 5                          ஆ) 3                          இ)  4                                ஈ) 6
7. KI மற்றும் நீர்த்த சல்ஃ பியூரிக் அமிலத்துடன் K2Cr2Oவினைபுரிந்து _____ ஐ வெளியேற்றுகிறது
அ) O2                         ஆ) I2                         இ) H2                           ஈ) SO2
8. பாரா காந்தத்தன்மை பண்பு ஏற்படக் காரணம் 
அ) ஜோடி எலக்ட்ரான்கள்     ஆ) முழுமையாக நிரப்பப்பட்ட  எலக்ட்ரான் உள்கூடுகள்
இ) தனித்த எலக்ட்ரான்கள்  ஈ) முழுமையாக காலியாக உள்ள எலக்ட்ரான் உள்கூடுகள்
9. சில்வர் நாணயத்திலிருந்து பெறப்பட்ட சில்வர் __________ உடன் சேர்த்து உருக்கி தூய்மையாக்கப்படுகிறது
அ) AgNO3                 ஆ) HNO3               இ) H2SO4                   ஈ) போராக்ஸ்
10. எந்த சில்வர்உப்பு புகைப்படத் தொழிலில் பயன்படுகிறது
அ) AgCl                     ஆ) AgNO3               இ) AgF                        ஈ) AgBr.
11. சில்வர் உமிழ்தலை உருகிய சில்வரின் மீது எந்த மெல்லிய படலம் ஏற்படுத்துவதன் மூலம் தடுக்கலாம்?
அ) போராக்ஸ்            ஆ) கரி                   இ) மணல்                     ஈ) சில்வர் புரோமைடு
12. பாலித்தீன் தயாரிப்பில் வினையூக்கியாக ______ பயன்படுகிறது
அ) V2O5                   ஆ) Fe                       இ) Mo                           ஈ) TiCl4.
13. காப்பரை உருக்கிப்பிரித்தலின்போது உருவாகும் கசடின் வாய்ப்பாடு
அ) Cu2O + FeS        ஆ) FeSiO3              இ) CuFeS2                  ஈ) Cu2S + FeO
14. கேசியஸ் ஊதாவின் நிறம்
அ) கரு ஊதா (அல்லது) சிவப்பு                ஆ) நீலம் 
இ) நீலம் கலந்த பச்சை                              ஈ) ஆப்பிள்  பச்சை
15. காப்பர் அணுவின் சரியான எலக்ட்ரான் அமைப்பு
அ) 3d104s2             ஆ) 3d104s1             இ) 3d94s2                     ஈ) 3d54s2
16. d – தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு
அ) (n-1)dl-l0           ஆ)  (n-1)d1-10 nsl-2      இ)  (n-1)d10 nsl-2     ஈ) (n-1)d5 ns1.
17. கீழ்க்கண்டவற்றுள் எது / எந்த அயனி அதிக எண்ணிக்கையிலான தனித்த  எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது? 
அ) Mn2+                     ஆ) Ti3+                   இ) V3+                           ஈ) Fe2+.
18. அயர்ன் தகடுகளை கால்வனைஸ் செய்யப் பயன்படும் உலோகம்
அ) குரோமியம்         ஆ) ஜிங்க்                இ) காப்பர்                     ஈ) சில்வர்
19. Ti+- ல் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 1. அதன் காந்தத் திருப்புத் திறன் BM –ல் அ) 1.414                   ஆ) 2                            இ) 1.732                     ஈ) 3
20. குரோமியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
அ) 3d64s0               ஆ) 3d54s1               இ) 3d44s2                    ஈ) 3d34s24p1
21. சில்வர் நாணயத்திலிருந்து சிலவரை பெறுதலில் முதலில் சேர்க்கப்படும் வினைப்பான் அ) அடர் சல்ஃ பியூரிக் அமிலம்                ஆ) அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம்  இ) அடர் நைட்ரிக் அமிலம்                        ஈ) ராஜதிராவகம்
22. ரூபி சிவப்பு நிற கண்ணாடி மற்றும் உயர்தர மண்பாண்டங்கள் தயாரித்தலில் பயன்படுவது
அ) கூழ்ம சில்வர்      ஆ) கேசியஸ் ஊதா     இ) ரூபி சில்வர்           ஈ) ரூபி காப்பர்
23. எந்த இடைநிலைத்தனிமம் அதிகபட்ச ஆசிஜனேற்ற நிலையைக் காட்டுகிறது?
அ) Sc                        ஆ) Ti                          இ) Os                          ஈ) Zn
24. மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத்தனிமம்
அ) ஸ்கேண்டியம்    ஆ) டைட்டானியம்    இ) ஜிங்க்                    ஈ) லாந்தனம்
25. காப்பர் சல்பேட்டின் நீர்மக் கரைசலுடன் அதிக உபரி அளவு KCN ஐ சேர்க்கும் பொழுது உருவாகும் சேர்மம்
அ) Cu(CN)2 / Cu2(CN)2                              ஆ) K2[Cu(CN)6]
இ) K[Cu(CN)2]                                                ஈ) Cu2(CN)2 + (CN)2.
26. கீழ்க்கண்ட சேர்மங்களில் எச்சேர்மம் குரோமைல் குளோரைடு  சோதனைக்கு  உட்படாது?
அ) CuCl2                  ) C6H5Cl              இ) ZnCl2                      ஈ) HgCl2
27. K2Cr2O7 - ஐ  பொறுத்தமட்டில்  தவறான  கூற்றுரையை  தேர்வு செய்து  எழுதுக
அ) இது ஒரு சிறந்த அசிஜனேற்றும் காரணி
ஆ) இது தோல்பதனிடும் தொழிற்சாலையில்  பயன்படுத்தப்படுகிறது இ) இது நீரில் கரையக்கூடியது
ஈ) இது ஃபெரிக் சல்பேட்டை ஃபெரஸ் சல்பேட்டாக குறைக்கிறது
28. கீழ்க்கண்டவற்றுள் எந்த அயனி நிறமற்ற நீர்கரைசலைத் தருகிறது?
அ) Ni2+                    ஆ) Cu+                        இ) Cu2+                        ஈ) Fe2+ 
29. அணு ஆர மதிப்புகள் ஏறத்தாழ ஒரே அளவைப் பெற்றுள்ள இணை எது?
அ) Mo, W                ஆ) Y, La                      இ)  Zr, Hf                        ஈ) Nb, Ta.
30. கீழ்க்கண்டவற்றுள் அதிகபட்ச காந்தத் திருப்புத் திறனை கொண்டது எது?

அ) 3d2                    ஆ) 3d6                         இ) 3d7                             ஈ) 3d9.
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment