June 02, 2012

கார்பாக்சிலிக் அமிலங்கள் (Carboxylic Acids) மூன்று மதிப்பெண்

1. ஃபார்மிக் அமிலத்தின் ஒடுக்கும் பண்பை சான்றுடன் விளக்கு.
பார்மிக் அமிலம் ஆல்டிஹைடு தொகுதியையும் கொண்டுள்ளது.

பார்மிக் அமிலம்  ஆல்டிஹைடு தொகுதியையும், கார்பாக்சில் தொகுதியையும் பெற்றுள்ளதால் தனித்தன்மையுடன் திகழ்கிறது. எனவே ஒடுக்கியாகச் செயல்படுகின்றது. ஃபெலிங்க் கரைசலையும் டாலன்ஸ் கரைசலையும் ஒடுக்குகிறது. பொட்டாசியம்  பெர்மாங்கனேட் கரைசலின் இளஞ்சிவப்பு நிறத்தை நிறமிழக்கச் செய்கிறது. மேற்கூறிய அனைத்திலும் பார்மிக் அமிலம் CO2 ஆகவும் நீராகவும் ஆக்சிஜனேற்றமடைகின்றது.


) பார்மிக் அமிலம் அம்மோனியம் கலந்த சில்வர் நைட்ரேட்  கரைசலை (டாலன்ஸ்  காரணி) உலோக சில்வராக ஒடுக்குகிறது.
HCOOH + Ag2O → H2O + CO2 + 2Ag
) பார்மிக் அமிலம் ஃபெலிங் கரைசலையும் ஒடுக்குகிறது. அதில் நீல நிறமுள்ள குப்ரிக்  அயனியை சிவப்பு நிறமுள்ள குப்ரஸ் அயனியாக ஒடுக்குகிறது.
HCOO + 2Cu2+ + 5OH → CO32– + Cu2O + 3H2O
         (நீலம்)                     (சிவப்பு)
2. பார்மிக் அமிலம் டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்குகிறது. ஆனால் அசிட்டிக் அமிலம் ஒடுக்குவதில்லை - காரணங்களை கொடு.
பார்மிக் அமிலம் ஆல்டிஹைடு தொகுதியையும் கொண்டுள்ளது. ஆனால் அசிட்டிக் அமிலம் ஆல்டிஹைடு தொகுதியை பெற்றில்லை. எனவே, பார்மிக் அமிலம் டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்குகிறது.
அல்லது
பார்மிக் அமிலம்  ஆல்டிஹைடு தொகுதியையும், கார்பாக்சில் தொகுதியையும் பெற்றுள்ளதால் தனித்தன்மையுடன் திகழ்கிறது. எனவே ஒடுக்கியாகச் செயல்படுகின்றது. டாலன்ஸ் கரைசலை உலோக சில்வராக ஒடுக்குகிறது.
HCOOH + Ag2O → H2O + CO2 + 2Ag


ஆனால் அசிட்டிக் அமிலம் ஆல்டிஹைடு தொகுதியை பெற்றில்லை. எனவே, டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்குவதில்லை.
3. சாசிலிக் அமிலத்திற்கான சோதனைகளைத் தருக.
1. சாசிலிக் அமிலத்தின் நீர்க் கரைசல் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன் ஊதா நிறத்தைத் தருகிறது.
2. சோடியம் பைகார்பனேட்டுன் நுரைத்துப் பொங்குதலை ஏற்படுத்துகிறது.
3. சோடியம் ஹைட்ராக்சைடில் கரைந்து அதை அமிலத்துடன் சேர்க்க திரும்பவும் வீழ்படிவைக் கொடுக்கிறது.
4. புரோமின் நீருடன் சேரும்பேது நிறம் நீங்கி வெண்மையான வீழ்படிவு உண்டாகிறது.
4. i) C3H7COOH ii) HCOOH மற்றும் iii) C11H23COOH இவைகளின் மூலங்களையும் மரபுப் பெயர்களையும் எழுது.
   வாய்பாடு             கிடைக்குமிடம்               பொதுப்பெயர்    
i) C3H7COOH           வெண்ணெய் (பியூடிரம்)  - பியூட்டிரிக் அமிலம்
ii) HCOOH                 சிவப்பு எறும்பு (பார்மிகா) - பார்மிக் அமிலம்
 iii) C11H23COOH   லாரெல் எண்ணெய்           - லாரிக் அமிலம்
5. மீத்தைல் சாசிலிலேட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
மீத்தைல் ஆல்கஹாலுடன் அடர் H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தும்போது   நறுமணமுள்ள நீர்மமான மீத்தைல் சாலிசிலேட் உருவாகின்றது.


6. பென்சோயிக் அமிலத்தின் பயன்களை எழுது.
1. சிறுநீரக புரைதடுப்பானாக,
2. சோடியம் பென்சோயேட் உணவைப் பாதுகாக்க,
3. பென்சாயிக் அமில ஆவி மூச்சுக் குழல் புரைதடுப்பானாக,
4. சாயத் தொழிலில் பயன்படுகிறது.
7. ஆக்ஸாலிக் அமிலத்தின் பயன்களை எழுது.
ஆக்ஸாலிக் அமிலம்
1. இரும்பு மற்றும் இங்க் கறைகளைப் போக்க,
2. சாயத் தொழிலிலும், காலிகோ அச்சிடுதலிலும் நிறமூன்றியாக,
3. இங்க் மற்றும் உலோகப் பூச்சு தயாரிக்க,
4. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க தரம்பார்த்தலில் பயன்படுகிறது.
8. ஆஸ்பிரின் என்பது என்ன? ஆஸ்பிரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ஆஸ்பிரின் எனப்படுகிறது.
சாலிசிலிக் அமிலம் அசிட்டிக் நீரிலியுடன் / அசிட்டைல் குளோரைடுடன் வெப்பப்படுத்தும்போது அசைலேற்றம் ஏற்பட்டு ஆஸ்பிரின் கொடுக்கிறது.


9. எஸ்டராக்குதல் வினையை ஒரு சான்றுடன் விளக்கு.
கார்பாக்சிலிக் அமிலங்கள் கனிம அமிலம் முன்னிலையில் ஆல்கஹால்களுடன் வினைப்பட்டு எஸ்டர்கள் உருவாக்குகின்றன. இவ்வினை எஸ்டராக்குதல் வினை எனப்படுகின்றது.
                                    H+
CH3COOH + C2H5OH → CH3COOC2H5 + H2O
10. லாக்டிக் அமிலத்துடன் நீர்த்த சல்ஃபியூரிக் அமிலத்தின் வினை என்ன?
நீர்த்த H2SO4, லாக்டிக் அமிலத்தை அசிட்டால்டிஹைடாகவும் ஃபார்மிக் அமிலமாகவும் பிரிகையுறச் செய்கிறது.
                              dil. H2SO4
CH3CH(OH)COOH → CH3CHO + HCOOH
11. மாற்று எஸ்டராக்குதல் வினை என்றால் என்ன?
சிறிதளவு அமில முன்னிலையில் ஈத்தைல் ஆல்கஹாலால் மீத்தைல் அசிட்டேட் பிளவுற்று ஈத்தைல் அசிட்டேட்டை உண்டுபண்ணுகிறது.
                                          H+
CH3COOCH3 + C2H5OH → CH3COOC2H5 + CH3OH
12. HVZ வினை பற்றி எழுது.
கார்பாக்சிலிக் அமிலங்கள் ஹாலஜன் மற்றும் பாஸ்பரஸ் ட்ரைஹாலைடுடன் ∝-C ல் ஹாலஜனேற்ற வினை நடக்கும்போது ஹெல்-வால்ஹார்ட் சென்ஸ்கி வினை (HVZ வினை) எனப்படுகிறது.
                   Br2 / PBr3                                H2O
RCH2COOH → RCH2COBr → RCHBrCOBr → RCHBrCOOH
13. கார்பாக்சிலிக் அமிலத்திற்கான இரு சோதனைகளைத் தருக.
1. கார்பாக்சிலிக் அமில நீர்க்கரைசல் நீல நிற லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றுகிறது.
2. கார்பாக்சிலிக் அமிலங்கள் சோடியம் பைகார்பனேட்டுடன் வினைப்பட்டு நுரைத்துப் பொங்குகிறது.
3. கார்பாக்சிலிக் அமிலங்களை ஆல்கஹாலுடன் அடர் H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தும்போது எஸ்டர் உண்டாகின்றது. இதை எஸ்டரின் பழமணத்திலிருந்து இனங்கண்டு கொள்ளலாம்.


14. பார்மிக் அமிலத்தின் பயன்கள் யாவை?
15. லாக்டிக் அமிலத்தின் பயன்கள் யாவை?
16. மனோ, டை, ட்ரை குளோரோ அசிட்டிக் அமிலம் ஆகியவற்றின் அமிலத்தன்மையை ஒப்பிடுக
17. பின்வரும் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக
     ) HOOC – COOH               ) CH3COOH                   ) HOOC (CH2)4 COOH
18. லாக்டைல் குளோரைடு, லாக்டைடு இவற்றின் அமைப்பை எழுதுக.
19. மெத்தில் சயனைடு அசிட்டமைடிலிருந்து வ்வாறு தயாரிக்கப்படுகிறது?
20. a) ஆக்சாலிக் அமிலத்தையும்   b) சக்சினிக் அமிலத்தையும் வெப்பப்டுத்தும் போது நிகழ்வதென்ன?
21. மாற்று எஸ்டராக்குதல் வினை ஆல்கஹால் ஏற்றம் என்பதற்கு தகுந்த வினையைத் தருக

ஒரு மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment