June 02, 2012

ஹைட்ராக்சி வழிப்பொருள்கள் (Hydroxy Derivatives) மூன்று மதிப்பெண்

1. ஆல்கஹாலை கிரிக்னார்டு கரணிக்கு கரைப்பானாகப் பயன்படுத்த முடியாது? ஏன்? / காரணம் கூறு.
1. அதிக காரத்தன்மையுள்ள கிரிக்னார்டு வினைப்பொருள்கள் ஆல்கஹாலால் ஆல்கேனா சிதைவடைகின்றன.
2. ஆல்கஹால்கள் வலிமை மிகுந்த காரங்களான R : மற்றம் H : ஆகியவற்றுடன் வினைபுரியுமளவு போதுமான அமிலத் தன்மை உடையவை.
R–OH + CH3MgBr → RO–Mg–Br + CH4
2. பீனாலை டையசோனியம் குளோரைடுடன் NaOH முன்னிலையில் வினைப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது? அல்லது பீனால், பென்சீன் டையசோனியம் குளோரைடுடன் இணைப்பு வினை பற்றிச் சிறு குறிப்பு தருக. அல்லது பீனாலுக்கான சாயசோதனை பற்றி எழுது. அல்லது சாயசோதனை மூலம் பீனால் எவ்வாறு கண்டறியப்படுகிறது? சமன்பாடு தருக. அல்லது இணைப்பு வினை பற்றிச் சிறு குறிப்பு தருக.
பீனால், பென்சீன் டையசோனியம் குளோரைடுடன் காரக்கரைசலில் இணைந்து p-ஹைட்ராக்சி அசோபென்சீனை (சிவப்பு ஆரஞ்சு சாயம்) உண்டுபண்ணுகிறது.
3. எத்தனாலை, மெத்தனாலிலிருந்து வேறுபடுத்தும் வினை யாது?
ஹாலோஃபார்ம் வினை:
CH3CHOH- தொகுதி உள்ள ஆல்கஹால்களை ஹாலோஜன் மற்றும் காரத்துடன் வினைப்படுத்தும்போது ஹாலோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது.
            I2/KOH            I2             KOH
C2H5OH → CH3CHO → CI3CHO → CHI3 + HCOOK
மெத்தனால் CH3CHOH – தொகுதி இல்லாததால் அது ஹாலோஃபார்ம் வினைக்கு உட்படுவதில்லை.
4. டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறுது? அல்லது கிளைக்காலிலிருந்து / எத்திலீன் கிளைக்காலிலிருந்து டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அல்லது டெக்ரான் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயனைத் தருக.
டெரிதாலிக் அமிலத்துடன் எத்திலீன் கிளைக்கால் ’டெரிலீன்’ என்ற பாலிமரை உருவாக்குகிறது. இது டெக்ரான் அல்லது டெரீன் எனவும் அழைக்கப்படுகிறது
பெருமளவில் செயற்கை இழையாகப் பயன்படுகிறது.
5. ஒருவன் ஆல்கஹால் உட்கொண்டிருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?
ஒருவன் ஆல்கஹால் உட்கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க சுவாசப் பகுப்பாய்வு நடத்தப்படுகிறது. எத்தனாலை அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமேட்டினால் ஆக்சிஜனேற்றம் செய்து கவனித்தறியப்படுகிறது. குரோமியம் அயனி (CrVI) மஞ்சள்  ஆரஞ்சிலிருந்து (CrIII) எனும்  பச்சை நிற அயனிகளாக  மாறினால்  ஆல்கஹால்  உள்ளது  உறுதி செய்யப்படுகிறது.
8H1+  +  Cr2O72-   +  3C2H5OH  ----------->  2Cr3+   +    3C2H4O  +   7H2O

4. தாலியன் வினை: பீனாலை தாலிக் நீரி­லி மற்றும் அடர் H2SO4 உடன் வெப்பப்படுத்தும்போது பீனால்ஃப்தலீன் உண்டாகிறது. வலிமை மிக்க காரத்துடன் கலக்கும்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றினால் பீனால்ஃப்தலீன் உருவாகியிருத்தல் தெளிவாகிறது.
6. பென்சைல் ஆல்கஹால் கிரிக்னார்டு தொகுப்பு முறையில் எவ்வாறு   தயாரிக்கப்படுகிறது?
பென்சைல் ஆல்கஹால் ஃபார்மால்டிஹைடுடன், ஃபினைல் மக்னீசியம் புரோமைடை வினைப்புரியச் செய்து தயாரிக்கப்படுகிறது.
7. பீனால் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
1. நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன் ஆய்வு: பீனால் ஊதா நிறத்தைக் கொடுக்கிறது.
2. ஹாலோஜனேற்றம்: பீனாலை புரோமின் நீருடன் வினைபுரியச் செய்யும்போது புரோமினின் நிறம் மறைந்து வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. 2, 4, 6-ட்ரைபுரோமோ பீனாலே இந்த வெண்மைநிற வீழ்படிவாகும்.
3. சாயசோதனை / இணைப்பு வினை: பீனால், பென்சீன் டையசோனியம் குளோரைடுடன் காரக்கரைசலில் இணைந்து p-ஹைட்ராகசி அசோபென்சீனை (சிவப்பு ஆரஞ்சு சாயம்) உண்டுபண்ணுகிறது.
8. பீனால் டவ் முறையில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அல்லது டவ் முறையை விளக்குக.
குளோரோபென்சீனை எரிசோடாவுடன் அழுத்தம் மற்றும்   உயர் வெப்பத்திற்கு உட்படுத்தி பீனால்கள் தயாரிக்கப்படுகின்றன.
                           623K
C6H5Cl + NaOH   C6H5OH + NaCl
                          300 atm.
இவ்வினை அரோமேட்டிக் கருக்கவர் பதிலீட்டு வினைக்கு சான்று ஆகும். ஆல்கைல் ஹாலைடுகளைக் காட்டிலும் அரைல் ஹாலைடுகளிலுள்ள C-Cl பிணைப்பு வலிமையுள்ளது. ஆகையால் உட்கரு ஹாலஜனை பதிலீடு செய்வது கடினம். எனினும் பெருமளவு தயாரிப்புக்கு இம்முறையே பயன்படுகிறது. இம்முறை டவ் முறை என அழைக்கப்படுகிறது.
9. C2H5OH ஐ எவ்வாறு C2H5 O C2H5 ஆக மாற்றுவாய்?
C2H5OH ஐ அடர். H2SO4 உடன் வினைப்படுத்தும் போது மூலககூறுகளுக்கிடையே நீர் நீக்கம் பெற்று C2H5 O C2H5 ஐ தருகிறது.
              H2SO4
2C2H5OH → C2H5 O C2H5 + H2O
               410K
10. பீனால்கள் ஆல்கஹால்களில் கரைகிறது. ஏன்?
பீனால்கள் ஆல்ஹால்களில் (மற்றும் ஈதரில்) கரையும் தன்மைக்குக் காரணம் மூலக்கூறுகளுக்கிடையே காணப்படும் ஹைட்ரஜன் பிணைப்பாகும்.
11. NaHCO3 இல் அசிட்டிக் அமிலம் கரைகிறது. ஆனால் பீனால் கரைவதில்லை. காரணம் கூறு.
பீனால்கள் சிறிதளவே அமிலப்பண்பை உடையன. எனவே பீனால்கள் NaOH ல் (வலிமை மிகுந்த காரத்தில்) கரைந்து உப்பைத் தருகிறது. ஆனால் NaHCO3 ல் (வலிமை குறைந்த காரத்தில்) கரைவதில்லை.
C6H5OH + NaOH → C6H5ONa + H2O
அசிட்டிக் அமிலம் பீனாலை விட வலிமை மிகுந்த அமிலம். எனவே, அசிட்டிக் அமிலம் NaHCO3 ல் (வலிமை குறைந்த காரத்தில்) கரைந்து உப்பைத் தருகிறது.
12. எத்திலீன் குளிர்ந்த நீர்த்த கார KMnO4 கரைசலுடன் வினைபுரியும் போது என்ன நிகழ்கிறது?
எத்திலீன் குளிர்ந்த நீர்த்த காரங்கலந்த KMnO4 கரைசலில் (பேயரின் கரணி) வினைபுரிவதால் எத்திலீன் கிளைக்கால் கிடைக்கிறது.
                           காரங்கலந்த KMnO4
CH2 = CH2 + H2O + (O) → CH2OH - CH2OH
13. எத்தனாலை விட கிளைக்கால் அதிக பாகுத்தன்மை ஏன் பெற்றிருக்கிறது?
எத்திலீன் கிளைக்காலில் இரு OH– உள்ளதால் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு மிகவும் வலுவானதாக உள்ளது. இரு OH– தொகுதிகளுக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பு ஏற்பட்டு ஒரு பாலிமர் அமைப்பு உருவாகிறது. இக்காரணத்தால் எத்தனாலை விட கிளைக்கால் அதிக பாகுத்தன்மையை பெற்றிருக்கிறது.
14. கோல்பின் வினையை விளக்குக. அல்லது சிறுகுறிப்பு தருக - கோல்பின் வினை.
சோடியம் பீனாக்சைடை CO2 உடன் அழுத்தத்திற்குட்படுத்தி 400 K க்கு வெப்பப்படுத்தும்போது சோடியம் சாலிசிலேட் உண்டாகிறது. இதை நீர்த்த HCl ஆல் சிதைக்கும்போது சாலிசிலிக் அமிலம் உண்டாகிறது. இதில் CO2 எலக்ட்ரான் கவர் பொருளாகும்.
15. புரப்பலீனிலிருந்து கிளிசராலை எவ்வாறு தொகுப்பாய்?
புரப்பலீனிலிருந்து கிளிசரால் கீழ்க்கண்டவாறு பெறப்படுகிறது:
படி- I: மீத்தைல் ஹைட்ரஜனுக்குப் பதில் குளோரின் பதிலீடு செய்யப்பெற்று அல்லைல் குளோரைடுஉண்டாகிறது
படி- II: நீராற்பகுப்பு நடைபெறுகிறது - கருக்கவர் பத்லீட்டு வினை
படி- III: அல்லைல் ஆல்கஹாலின் ஒலிஃபின் பகுதியில் ஹைப்போ குளோரஸ் அமிலத்தின் சேர்க்கை
படி- IV:  குளோரினுக்குப் பதிலாக ஹைட்ராக்சில் தொகுதியின் கருக்கவர் இடப்பெயர்ச்சி நீராற்பகுப்பு வினையில் நடைபெறுகிறது
16. பென்சைல் ஆல்கஹாலின் பயன்களை எழுது.
1. குறிப்பிட்ட பகுதியை மரத்துப் போகச் செய்யும் நரம்பில் போடும் ஊசி மருந்தாக
2. புரையோடுவதைத் தடுக்கும் களிம்பில்
3. வாசனைப் பொருள்களில் எஸ்டராக (பென்சைல் அசிடேட் மல்லிகை மணம் கொண்டது)
4. ஆஸ்துமா, கக்குவான் போன்றவற்றைக் குணப்படுத்தும் பென்சைல் பென்சோயேட்டாக
5. செயற்கை பிசின்கள் பெருமளவில் தயாரிக்க.
17. கிளிசரா­­லிலிருந்து அல்லைல் ஆல்கஹாலை எவ்வாறு பெறுவாய்?
கிளிசராலும் ஆக்சாலிக் அமிலமும் கலந்த கலவையை 533 K க்கு வெப்பப்படுத்தினால் கிளிசரைல் டைஆக்சலேட் உண்டாகிறது. இதிலிருந்து இரு CO2 மூலக்கூறுகள் நீங்கி அல்லைல் ஆல்கஹால் உண்டாகிறது.
டைஎஸ்டரிலுள்ள வளைய அமைப்பிலுள்ள பிணைப்பின் மூலம் இரு CO2 மூலக்கூறுகள் நீக்கப்படுகின்றன.
18. எத்திலீன் கிளைக்காலை 1, 4-டைஆக்சேனாக எவ்வாறு மாற்றுவாய்?
அடர். H2SO4 வலிமை மிகுந்த அமிலமாகவும், நீர் நீக்கியாகவும் இருப்பதால் எத்திலீன் கிளைக்காலில் இருந்து இரு நீர் மூலக்கூறுகளை நீக்கி 1, 4-டைஆக்சேனை உண்டாக்குகிறது.
19. கிளிசரா­­லிலிருந்து நைட்ரோ கிளிசரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
கிளிசராலை நன்கு குளிர்விக்கப்பட்ட அடர். H2SO4 மற்றும் புகையும் HNO3 கலவையுடன் வினைபுரியச் செய்யும்போது நைட்ரோ கிளிசரின் உண்டாகிறது.
20. பீனால்ஃப்தலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அல்லது பீனாலை பீனால்ஃப்தலீனாக எவ்வாறு மாற்றுவாய்?
தாலியன் வினை: பீனாலை தாலிக் நீரி­லி மற்றும் அடர் H2SO4 உடன் வெப்பப்படுத்தும்போது பீனால்ஃப்தலீன் உண்டாகிறது. வலிமை மிக்க காரத்துடன் கலக்கும்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றினால் பீனால்ஃப்தலீன் உருவாகியிருத்தல் தெளிவாகிறது.
21. 2-மீத்தைல்-2-புரப்பனாலை 2-மீத்தைல்-2-புரப்பீனாக எவ்வாறு மாற்றுவாய்? அல்லது மூவிணைய பியூட்டைல் ஆல்ஹால் எவ்வாறு ஐசோபியூட்டலீனாக மாற்றப்படுகிறது?
வினைவேகமாற்றியால் ஹைட்ரஜன் நீக்கம் செய்தல்:
573 K அளவு வெப்பப்படுத்திய காப்பரின் மீது மூவிணைய பியூட்டைல் ஆல்கஹாலின் / 2-மீத்தைல்-2புரப்பனாலின் ஆவியைச் செலுத்தி ஹைட்ரஜன் நீக்கம் செய்தால் ஐசோபியூட்டலீனை / 2-மீத்தைல்-2-புரப்பீனை தருகின்றது.
மூவிணைய ஆல்கஹால் ∝-ஹைட்ரஜன் இல்லாததால் மேற்கூறிய நிபந்தனைகளில் நீர் நீக்கம் பெற்று ஒலிஃபீனைத் தருகிறது.
22. பீனா­­லிலிருந்து பிக்ரிக் அமிலத்தை எவ்வாறு பெறுவாய்?
பீனால் நைட்ரோ ஏற்றக் கலவையுடன் (அடர். H2SO4 +அடர். HNO3) வினைபுரிந்து பிக்ரிக் அமிலத்தைக் கொடுக்கிறது.
23. கிளிசரால் KHSO4 உடன் வினைபுரியும் போது என்ன நிகழ்கிறது? அல்லது கிளிசரால் KHSO4 உடன் எவ்வாறு வினைபுரிகிறது? அல்லது அக்ரோலின் எவ்வாறு உருவாகிறது?
கிளிசராலை KHSO4 (அல்லது அடர். H2SO4 அல்லது P2O5) உடன் வெப்பப்படுத்தும்போது நீர் நீக்கம் நடைபெறுகிறது. இரு β-நீக்க வினை நடைபெற்று அக்ரோலின் அல்லது அக்ரிலிக் ஆல்டிஹைடு கிடைக்கிறது.


24. கிளிசராலில் இருந்து எவ்வாறு பார்மிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது?
25. பீனாலைக் கண்டறியும் சோதனைகளைத் தருக.
26. மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால்களின் ஆவியை 573 K வெப்பநிலையில் Cu - வுடன் சூடுபடுத்தினால் என்ன நிகழும்?
27. கிளிசரோஸ் என்றால் என்ன? அது கிளிசரா­­லிலிருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
28. மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால், விக்டர் மேயர் ஆய்வில் நிகழ்த்தும் வினையை எழுதுக
29. ஸ்காட்டன் பௌமன் வினை விளக்கு
30. சிறு குறிப்பு வரைக - ரீமர் டீமன் வினை
31. 533 K வெப்பநிலையில் கிளிசராலின் மீது ஆக்சாலிக் அமிலத்தின் வினை யாது?
32. எத்திலீன் கிளைக்காலை அடர் பாஸ்பாரிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும்போது நிகழும் வினையை எழுதுக
33. பீனாலின் ஆக்சிஜனேற்ற வினையைத் தருக.
34. ஈரிணைய ஆல்கஹாலுக்கான விக்டர் மேயர் சோதனையை எழுதுக
35. ஆக்சிஜனேற்ற முறையில் 1-புரப்பனால் மற்றும் 2-புரப்பனாலை எவ்வாறு வேறுபடுத்துவாய்?
36. டொலுவீனிலிருந்து பென்சைல் ஆல்கஹால் வ்வாறு தயாரிக்கப்படுகிறது?
37. வினையை பூரஂதஂதி செய்து விளைபொருளை பெயரிடுக
                               Al2O3
       CH3CH2OH ------------>?
                                 620 K
38. கியூமினிலிருந்து பீனால் எவ்வாறு  பெறப்படுகிறது?
39. கிளிசரா­­லின் ஏதேனும் மூன்று பயன்களை எழுது.
40. குறிப்பு வரைக - லெடரர்-மனசே வினை

அலகு – 17 ஈதர்கள்
1. கீழ்க்காண்பனவற்றின் IUPAC பெயர்களை எழுது. (a) C2H5OCH3          (b) C6H5OC2H5
2. ஈதர்களை உலரும்வரை வெப்பப்படுத்தக்கூடாது. ஏன்?
3. கிரிக்னார்டு கரணிகளுக்கு ஈதர்கள் சிறந்த கரைப்பான்கள் - காரணம் கூறு.
4. வில்லியம்சன் தொகுத்தல் பற்றி குறிப்பு வரைக.
                                                523 K / Al2O3
5. தீர்வு செய்    C2H5OH -------------------------->  ?
6. ஈதர்கள் ஏன் நீரில் கரைவதில்லை?
7. டைஎத்தில் ஈதருடைய பயன்கள் யாவை?
8. அனிசோல் லூயி அமிலத்துடன் எவ்வாறு வினைபுரிகிறது?
9. அனிசோலை நைட்ரோ ஏற்றம் செய்தால் கிடைப்பது யாது?
10. ஃபினாலை அனிசோலாக மாற்றுவதைக் காட்டும் சமன்பாடு எழுது 
ஒரு மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment