June 02, 2012

கரிம வேதியியலில் மாற்றியம் (Isomerism in Organic Chemistry) மூன்று மதிப்பெண்

1. இனன்சியோமர், டயாஸ்டிரியோமர் - ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுக.

. எண்
இனன்சியோமர்
டயாஸ்டிரியோமர்
1
ஒளிசுழற்சி மாற்றியங்கள் ஒத்த சுழற்சி அளவையும் எதிர்மறையான குறியீட்டையும் கொண்டவை.
ஒளிசுழற்சியின் அளவிலேயே மாறுபடுகிறது.
2
இவை மேற்பொருந்தாத பொருள் ஆடி பிம்ப தொடர்புடைய புறவெளி அமைப்பு கொண்டவை.
இவை ஆடிபிம்பத் தொடர் புடையவையாக இருக்காது.
3
இவை ஒளி சுழற்றும் திசையில் மட்டும் மாறுபடும். மற்ற எல்லா பண்புகளிலும் ஒத்ததாயிருக்கும்.
இவை எல்லா இயற்பியல் பண்புகளிலும் வேறுபடும்.
4
d, l மாற்றியங்களை, கலவையிருந்து தனித்தனியே பிரித்தல் அவ்வளவு எளிதல்ல.
டயாஸ்டிரியோமர்களை டயாஸ்டிரியோமர்களை எளிதாக பிரித்தல் இயலும்.

2. ஒரு மூலக்கூறு ஒளிச்சுழற்சி மாற்றியப் பண்பையுடையதாயிருக்கத் தேவையான நிபந்தனைகளைத் தருக. அல்லது ஒரு மூலக்கூறு ஒளி சுழற்றும் தன்மையுடைதாயிருக்கத் தேவையான நிபந்தனைகளைத் தருக.
1. ஒளி சுழற்றும் தன்மையுள்ள எல்லா சேர்மங்களிலும் குறைந்தது ஒரு கார்பன் அணு நான்கு வெவ்வேறு அணுக்கள் அல்லது தொகுதிகளுடன் பிணைக்கப்பட்ட நிலையில் (சீர்மைத்தன்மையற்ற கார்பன் அணு) இருக்கிறது.
2. சீர்மைத்தன்மையற்ற மூலக்கூறு ஆடி பிம்பத்துடன் மேல் பொருந்தாத் தன்மையுடையதாயிருக்கிறது. இத்தகைய மூலக்கூறுகள் ‘கைரல்’ மூலக்கூறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு மூலக்கூறு ஒளி சுழற்றும் தன்மையுடையதாயிருக்க ‘கைரல் தன்மை’ என்பதே மிக முக்கியமானதும், போதுமானதான நிபந்தனையாகும்.
4. கீழ்க்கண்ட சேர்மங்களை ஒருபக்க, மறுபக்க ஐசோமர்களாகக் குறிப்பிடுக
3. 2-பென்டீனின் சிஸ், டிரான்ஸ் மாற்றிய அமைப்புகளை தருக.
5. E / Z-குறியீடுகளால் குறிப்பிடுக. அல்லது E, Z என வகைப்படுத்துக.
சேர்மம் 1 ல்,  ஒலிஃபின் கார்பனுடன் பிணைக்கப்பட்டுள்ள வெவ்வேறு தரமுள்ள தொகுதிகள் ஒரே திசையில் அமைந்திருப்பதால் ‘E’ மாற்றியம்.
சேர்மம் 2 ல்,  ஒரே தரமுள்ள தொகுதிகள்  இரு ஒலிஃபின் கார்பன் அணுக்களுடனும், ஒரே திசையை நோக்கிய வண்ணம் பிணைக்கப்பட் டிருப்பதால் ‘Z’ மாற்றியம்.
6. மீசோ டார்டாரிக் அமிலம், கைரல் கார்பனைக் கொண்ட ஒளிசுழற்றும் தன்மையில்லாத சேர்மம் - நியாயப்படுத்துக.
மீசோ மாற்றியத்தில் இரண்டு சீர்மைத்தன்மையற்ற கார்பன் அணுக்கள் இருப்பினும், ஒன்று மற்றொன்றின் அடிபிம்பமாக இருக்கிறது. விளைவு, இம்மூலக்கூறை முழுமையாக நோக்கும்போது சீர்மைத்தன்மையுள்ளதாக இருக்கிறது. இம்மூலக்கூறில் சீர்மைத்தளம் ஒன்று இருக்கிறது. இம்மூலக்கூறில் சீர்மைத்தளம் இரு சம பாதியாக பிரிக்கிறது. அதனால் இம்மூலக்கூறின் புறவெளி அமைப்பு, அடிபிம்பத்தின் மேற்பொருந்துவதாக உள்ளது.
மீசோ டார்டாரிக் அமிலத்தின் ஒளி சுழற்றாத் தன்மை மூலக்கூறின் உள்ளார்ந்த பண்பாகிறது. அதனால் இதை உள்ளார்ந்த ஈடு செய்தல் (internal compensation) என்கிறோம். இது மூலக்கூறின் சீர்மைத்தன்மையால் ஏற்படுகிறது. மீசோ அமைப்பை அதன் ஒளிசுழற்சி பண்புடைய பகுதிப் பொருட்களாக, இனன்சியோமர்களின் இணையாகப் பிரிக்க முடியாது. மீசோ சேர்மம் ஒரே ஒரு சேர்மமேயன்றி கலவையல்ல. இதனால் இதை பிரித்தல் செய்ய இயலாது.
7. டிரான்ஸ் அமைப்பு சிஸ் அமைப்பைவிட நிலையானதாக இருக்கிறது. ஏன்?
சிஸ் அமைப்பில் ஒத்த தொகுதிகள் அருகாமையில் இருப்பதால் அவற்றிற்கிடையே வாண்டர்வால் விலக்குவிசைகள் மற்றும் கொள்ளிடத்தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சிஸ் அமைப்பு நிலைத்தன்மையில் குறைந்து போகிறது. டிரான்ஸ் அமைப்பில் ஒத்த தொகுதிகள் எதிர் திசையில் அமைந்துள்ளதால் கொள்ளிடத்தடையோ விலக்குவிசையோ ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் பொதுவாக டிரான்ஸ் அமைப்பு சிஸ் அமைப்பைவிட நிலையானதாக இருக்கிறது. மேலும் சிஸ் மாற்றியம் டிரான்ஸ் மாற்றியத்தைவிட அதிக வினைத்திறன் கொண்டதாக இருக்கிறது. டிரான்ஸ் மாற்றியத்தைவிட , சிஸ் மாற்றியம்  அதிக ஆற்றல் உடையது.
8. ஒளிசுழற்சி மாற்றியங்கள் என்றால் என்ன? சான்று தருக.
ஒரே மூலக்கூறு வாய்ப்பாடும் ஒத்த இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளையும் கொண்ட சேர்மங்கள் தள முனைவுற்ற ஒளியை சுழற்றும் தன்மையில் வேறுபடுவதை ஒளி சுழற்றும் தன்மையுள்ளவை என்கிறோம். இத்தகைய பண்பை ஒளி சுழற்சி மாற்றியம் / ஒளியியல் மாற்றியம் என்கிறோம்.
அல்லது
ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு ஆனால் முப்பரிமாண அமைப்பில் கைரல் கார்பன் அணுவைச் சுற்றி வேறுபட்ட நிலையில் அணுக்கள் அல்லது தொகுதிகளுடன் பிணைக்கப்பட்ட நிலையில் உள்ள சேர்மங்கள் ஒளி சுழற்சி மாற்றியங்கள்.
சான்றுகள்:
லாக்டிக் அமிலம், டார்டாரிக் அமிலம், குளுக்கோஸ், ப்ரக்டோஸ், α- அமினோ அமிலங்கள் (கிளைசினைத் தவிர), பியுடேன் 2,3-டையால்.
9. சுழிமாய்க் கலவை என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
d மற்றும் l மாற்றியங்கள்  சம அளவில் கலந்தால் கிடைப்பது, ‘சுழிமாய்க் கலவை' (racemic mixture). இவ்வாறு கலவையைத் தயாரித்தல் ‘சுழிமாய்க் கலவையாக்கல்' எனப்படுகிறது. இக்கலவை ஒளிசுழற்றும் தன்மையற்றது. இக்கலவையில் வலஞ்சுழற்றியின் ஒளிசுழற்சி, இடஞ்சுழற்றியின் ஒளிசுழற்சியினால் சமன்செய்யப்பட்டு நிகர திருப்புத்திறன் பூஜ்யமாகிறது. அதாவது மறைந்து போகிறது. இக்கலவை ஒளிசுழற்றும் தன்மையற்றதாகத் தோற்றமளிக்கிறது. எனினும் இதிலுள்ள மாற்றியங்களைத் தகுந்த முறையில் தனித்தனியே ஒளிசுழற்றும் தன்மையுள்ள இரு மாற்றியங்களாகப் பிரித்தெடுக்க முடியும். இவ்வகைப் பிரித்தலையே "சுழிமாய்க் கலவையைப் பிரித்தல்' என்கிறோம்.
எடுத்துக்காட்டு:
d- டார்டாரிக் அமிலம் மற்றும் l- டார்டாரிக் அமிலம் சம அளவில் கலந்தால் கிடைப்பது, ‘சுழிமாய்க் கலவை'. இக்கலவை ஒளிசுழற்றும் தன்மையற்றது. இக்கலவையை தனித்தனியே ஒளிசுழற்றும் தன்மையுள்ள இரு மாற்றியங்களாகப் பிரித்தெடுக்க முடியும்.


10. சுழிமாய்க் கலவையாக்கல் வரையறு
11. சின்னமிக் மிலத்தின் Z மற்றும் E மைப்புகளைக் காட்டுக.
12. 1, 3 – பியூட்டாடையீனின் S–சிஸ் மற்றும் S–டிரான்ஸ் அமைப்புகளை வரைக
13. மீசோ அமைப்பை, சுழிமாய்க் கலவையிலிருந்து வேறுபடுத்துக
14. d, l மற்றும் மீசோ டார்டாரிக் அமிலத்தின் வாய்பாடு (புறவெளி அமைப்பு) தருக
15. மெலியிக் அமிலம் மற்றும் ஃப்யூமரிக் அமிலத்தின் வடிவ மாற்றியமைப்புகளை வரை
16. கிளிசரால்டிஹைடின் புறவெளி அமைப்பான 'D' மற்றும் 'L' வரைக
ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment