March 12, 2015

ஆன்லைன் சோதனை - உட்கரு வேதியியல் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. 92U235 உட்கரு ஒரு நியூட்ரானை உறிஞ்சி 34Xe139, 38Sr94 மற்றும் X. விளைபொருள்களைத் தருகிறது. இதில் X என்பது
  2. 3 நியூட்ரான்கள்
    2 நியூட்ரான்கள்
    α – துகள்
    β – துகள்

  3. ஒரு கிராம் கதிரியக்க ஐசோடோப்பில் 24 மணி நேரத்திற்குப்பின் 0.125கி எஞ்சி நின்றது. அரை வாழ்காலத்தைக் கணக்கிடு
  4. 24 மணிகள்
    12 மணிகள்
    8 மணிகள்
    16 மணிகள்

  5. 5B8   4Be8 என்ற வினையில் வெளிவிடப்படும் துகள்
  6. α – துகள்
    β – துகள்
    எலக்ட்ரான் கவர்தல்
    பாசிட்ரான் துகள்

  7. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ்காலம் 1500 வருடங்கள். சிதைவு மாறிலியின் மதிப்பை நொடி அளவில் கணக்கிடுக
  8. 0.1465 x 10 – 10 நொடி –1
    0.2465 x 10 – 10 நொடி –1
    0.1465 x 10 – 8 நொடி –1
    0.3645 x 10 – 10 நொடி –1

  9. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ்காலம் 100 நொடிகள். அத் தனிமத்தின் சராசரி வாழ்காலம்
  10. 100 நொடிகள்
    50 நொடிகள்
    200 நொடிகள்
    144 நொடிகள்

  11. உட்கரு வினைகளில் இருபுறமும் ______ சமன் செய்யப்படும்
  12. நிறை
    அணுக்களின் எண்ணிக்கை
    நிறை எண்
    அணு எண் மற்றும் எண் நிறை

  13. β – துகள் இழப்பு ______ என்பதற்கு சமம்
  14. ஒரு புரோட்டான் அதிகரிப்பு
    ஒரு நியூட்ரான் இழப்பு
    இவற்றுள் ஏதுமில்லை
    (அ) மற்றும் (ஆ)

  15. கதிர்வீச்சுக்கான காரணம்
  16. நிலைத்த எலக்ட்ரான் அமைப்பு
    நிலைத்த உட்கரு
    நிலைப்புத் தன்மையற்ற உட்கரு
    நிலைப்புத் தன்மையற்ற எலக்ட்ரான் அமைப்பு

  17. கீழ்க்கண்டவற்றுள் எத் தனிமத்தின் ஐசோடோப்பு அணுக்கரு பிணைப்பு வினையில் பயன்படுத்தப்படுகிறது?
  18. பேரியம்
    லெட்
    யுரேனியம்
    சீசியம்

  19. ஊடுருவும் ஆற்றல் அதிகம் கொண்ட கதிர்வீச்சு எது?
  20. α - கதிர்
    β - கதிர்
    γ - கதிர்
    அனைத்தும் சம ஊடுருவும் தன்மை வாய்ந்தவை

  21. 5B84Be8 என்ற வினை நடைபெற காரணம்
  22. α - சிதைவு
    β - சிதைவு
    எலக்ட்ரான் கவர்தல்
    பாஸிட்ரான் சிதைவு

  23. 7N15 உட்கருவை புரோட்டானால் தாக்கினால் 6C12 மற்றும் ______ ஐத் தருகிறது
  24. α - துகள்
    β - துகள்
    நியூட்ரான்
    புரோட்டான்

  25. நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் பயன்படும் பொருள்
  26. நீர்
    டியூட்டீரியம்
    யுரேனிய சேர்மம்
    கேட்மியம்

  27. 13Al27 உட்கருவைத் தாக்கி 15P30 உட்கரு மற்றும் நியூட்ரானைத் தரும் தாக்கும் துகள்
  28. α - துகள்
    டியூட்ரான்
    புரோட்டான்
    நியூட்ரான்

  29. பீட்டா (β) துகள் என்பது:
  30. +1e0
    – 1e0
    1H1
    2He4

  31. கதிரியக்கம் என்ற நிகழ்வைக் கண்டறிந்தவர்
  32. மேடம் க்யூரி
    பியரி க்யூரி
    ஹென்றிபெக்கோரல்
    ருத்தர்போர்டு

  33. 79Au198 உட்கருவின் அரைவாழ்வுக்காலம் 150 நாட்கள். அதன் சராசரி வாழ்வுக்காலம்
  34. 216 நாட்கள்
    21.6 நாட்கள்
    261 நாட்கள்
    26.1 நாட்கள்

  35. 92x232  89y220 என்ற வினையில் வெளிவிடப்படும் α - மற்றும் β - துகள்களின் எண்ணிக்கை
  36. 3 α, 3 β
    5 α, 3 β
    3 α, 5 β
    5 α, 5 β

  37. 92U238  82Pb206 என்ற உட்கரு வினையில் வெளிவிடப்படும் α மற்றும் β துகள்களின் எண்ணிக்கை
  38. 7 α, 5β
    6 α, 4β
    4 α, 3 β
    8 α, 6 β

  39. 90Th232 82Pb208 என்ற உட்கருவினையில் வெளியிடப்படும் α மற்றும் β துகள்களின் எண்ணிக்கை
  40. 1α, 4β
    2α, 2β
    6α, 4β
    8α, 4β

  41. உட்கரு வினைகளில் அதிவேக தாக்கும் துகள்கள் குறியிடப்பட்ட கனத்த உட்கருக்களை பல சிறு துகள்களாகச் சிதைக்கின்றன
  42. உட்கரு பிளப்பு வினை
    உட்கரு பிணைப்பு வினை
    பல சிறு சிதைவு வினை
    இவை அனைத்தும்
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment