1. ஹாலோஃபார்ம் வினையை எடுத்துகாட்டுடன் விளக்குக.
CH3CHOH- அல்லது CH3CO– தொகுதி உள்ள சேர்மங்கள் ஹாலோஜன் மற்றும் காரத்துடன் வினைப்படுத்தும்போது ஹாலோஃபார்ம் வினைக்கு உட்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
அசிட்டோனில் உள்ள ∝ –கார்பன் அணு ஹாலோஜனேற்றத்திற்கு உட்படுகிறது. NaOH உடன் குளோரோஃபார்ம் உண்டாகிறது.
CH3–CO–CH3 + 3Cl2 → CCl3 – CO – CH3 + 3HCl
2. ஃபார்மால்டிஹைடும், பென்சால்டிஹைடும் கான்னிசரோ வினைக்கு உட்படுகின்றன. ஆனால் அசிட்டால்டிஹைடு உட்படுவதில்லை – காரணங்களை ஆராய்க.
∝–ஹைட்ரஜன் இல்லாததால் ஃபார்மால்டிஹைடும், பென்சால்டிஹைடும் கான்னிசாரோ வினைக்கு உட்படுகின்றன. அடர் NaOH உடன் ஃபார்மால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வெப்பப்படுத்தும்போது தன் ஆக்சிஜனேற்றமும், ஒடுக்கமும் நிகழ்கின்றன.
NaOH
C6H5CHO + C6H5CHO → C6H5COONa + C6H5CH2OH
NaOH
HCHO + HCHO → HCOONa + CH3OH
ஆனால் அசிட்டால்டிஹைடில் மூன்று ∝ –ஹைட்ரஜன்கள் இருப்பதால் கான்னிசரோ வினைக்கு உட்படுவதில்லை.
3. கீழ்க்காண்பனவற்றின் IUPAC பெயர்களை எழுது. அ) குரோட்டனால்டிஹைடு ஆ) மீத்தைல்-n-புரப்பைல் கீட்டோன் இ) பினைல் அசிட்டால்டிஹைடு
பொதுப்பெயர் IUPAC பெயர்
i) குரோட்டனால்டிஹைடு – 2-பியூட்டீனேல்
ii) மீத்தைல்-n-புரப்பைல் கீட்டோன் – 2-பென்டனோன்
iii) பினைல் அசிட்டால்டிஹைடு – பினைல் ஈத்தேனேல்
4. ஃபார்மால்டிஹைடு, NH3 உடன் எவ்வாறு வினைபுரிகிறது?
NH3 உடன் ஃபார்மால்டிஹைடு ஹெக்சாமெத்தின் டெட்ராமினைக் கொடுக்கிறது.
6CH2O + 4NH3 → (CH2)6N4 + 6H2O
5. ஃபிரீடல்- கிராப்ட் முறையில் அசிட்டோஃபீனோன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
பென்சீன் CH3COCl உடன் நீரற்ற AlCl3 வினைவேக மாற்றியின் முன்னிலையில் வினைபுரிந்து அசிட்டோஃபீனோனை கொடுக்கிறது.
5. ஃபிரீடல்- கிராப்ட் முறையில் அசிட்டோஃபீனோன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
பென்சீன் CH3COCl உடன் நீரற்ற AlCl3 வினைவேக மாற்றியின் முன்னிலையில் வினைபுரிந்து அசிட்டோஃபீனோனை கொடுக்கிறது.
6. ஃபார்மலின் என்பது என்ன? அதன் பயன் யாது?
40% ஃபார்மால்டிஹைடின் நீர்க்கரைசல் ஃபார்மலின் எனப்படும்.
பயன்: உயிரியல் பொருள்களைப் பாதுகாக்கவும், தோல் பதனிடுதலும் பயன்படுகிறது.
7. ரோசன்மண்ட் ஒடுக்கம் என்றால் என்ன? அதில் BaSO4 சேர்ப்பதன் நோக்கம் என்ன?
அமில குளோரைடுகள் ஹைட்ரஜனால் பேரியம் சல்பேட்டில் உள்ள பெல்லாடியம் முன்னிலையில் ஒடுக்கப்படும்போது ஆல்டிஹைடுகள் கிடைக்கின்றன. இது ரோசன்மண்ட் ஒடுக்கம் எனப்படுகிறது.
ஆல்டிஹைடு மேலும் ஒடுக்கமடையாமல் தடை செய்ய BaSO4 வினைவேக நச்சாக பயன்படுத்தப்படுகிறது. இல்லையெனில் உருவான ஆல்டிஹைடு மேலும் ஒடுக்கமடைந்து ஓரிணைய ஆல்கஹாலாகிவிடும்.
8. யூரோட்ராபின் என்பது என்ன? யூரோட்ராபின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயனைத் தருக.
NH3 உடன் ஃபார்மால்டிஹைடு ஹெக்சாமெத்தின் டெட்ராமினைக் கொடுக்கிறது. இது யூரோட்ராபின் எனப்படுகிறது.
6CH2O + 4NH3 → (CH2)6N4 + 6H2O
பயன்: மருத்துவத் துறையில் ‘யூரோட்ராபின்’ என்னும் பெயரில் சிறுநீரக புரைதடுப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. / சிறுநீரகம் புரையோடுவதைத் தடுக்கப் பயன்படுகிறது.
அமைப்பு:
9. கிளமன்சன் ஒடுக்கம் பற்றி குறிப்பு வரைக.
ஜிங்க் இரசக்கலவை, அடர் HCl உடன் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் ஒடுக்கமடைந்து ஹைட்ரோ கார்பன்களாகின்றன.
இவ்வினை கார்பனைல் கார்பனுடன் எலக்ட்ரான் சேர்க்கை நடைபெற்று அதைத் தொடர்ந்து புரோட்டனேற்றம் பெற்று நடைபெறுகிறது. ஜிங்க் உலோகம் எலக்ட்ரான்களின் மூலமாக உள்ளது. மெர்க்குரி இல்லாவிட்டால் ஹைட்ரஜன் வாயு வெளிவிடப்பட்டு அவ்வினை முடிவுபெறாமல் இருக்கும். இவ்வினை ‘கிளெமன்சன் ஒடுக்கம்’ எனப்படும்.
10. ஆல்டிஹைடுகளுக்கான இரு சோதனைகளைக் கூறு.
ஆல்டிஹைடுகள் எளிதாக ஆக்சிஜனேற்றம் அடைவதால் அவைகள் ஒடுக்கிகள் ஆகும். இவை
1. டாலன்ஸ் கரணி (அம்மோனியம் ஹைட்ராக்சைடு கலந்த சில்வர் நைட்ரேட்டை) உலோக சில்வராகவும்,
2. ஃபீலிங் கரைசலை (காப்பர் சல்பேட், சோடியம் பொட்டாசியம் டார்ட்ரேட்) சிவப்பு நிற குப்ரஸ் ஆக்சைடாகவும் ஒடுக்கமடையச் செய்கின்றன.
CH3CHO + 2Ag+ + 3OH– → CH3COO– + 2Ag + 2H2O
ஆல்டிஹைடு அசிட்டேட் அயனி சில்வர் ஆடி
CH3CHO + 2Cu2+ + 5OH– → CH3COO– + Cu2O + 3H2O
(நீலம்) (சிவப்பு நிற வீழ்படிவு)
குப்ரிக் அயனி குப்ரஸ் அயனி
3. அலிஃபாட்டிக் ஆல்டிஹைடுகள் ஷிஃப் கரணியின் இயற்கை நிறத்தை (இளஞ்சிவப்பு) திரும்ப பெறச் செய்கின்றன. (ஆழ்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள ஷிப் கரணியின் நீர்க் கரைசல் SO2 செலுத்தப்பட்டு அக்கரைசல் நிறமற்றதாகிறது. இந்நிறமற்ற கரைசலே இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது).
11. பென்சால்டிஹைடு அடர் NaOH உடன் வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?
12. அசிட்டோன் குளோரோஃபார்முடன் KOH முன்னிலையில் எவ்வாறு வினைபுரிகிறது?
13. பெர்கின்ஸ் வினையை எழுதுக
14. ஃபிரீடல் - கிராப்ட் முறையில் பென்சோஃபீனோன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
15. போபோட் விதியை எழுதுக
16. நவநகல் வினையை எழுதுக
17. ஹெக்சா
மெத்திலீன் டெட்ராமினின் வாய்பாட்டை எழுதி, அமைப்பை வரைக
18. IUPAC பெயர்
தருக
19. மெசிட்டிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
20. குறுக்க கன்னிசாரோ வினையில் பார்மல்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடு வினைபட்டு பென்சைல் ஆல்கஹாலை மட்டுமே தருகிறது. மெத்தனாலைத் தருவதில்லை. காரணம் கூறு
21.
மாலகைட் பச்சை என்றால்
என்ன?
அது எவ்வாறு தயாரிக்கபடுகிறது?
22. கால்சியம் அசிட்டேட்டை உலர்
காய்ச்சி வடித்தால்
என்ன நிகழும்?
23. பென்சோஃபீனோனை எவ்வாறு பென்சீனாக எவ்வாறு மாற்றுவாய்?
No comments:
Post a Comment