April 22, 2012

p - தொகுதித் தனிமங்கள் – II (p – Block Elements ) ஒரு மதிப்பெண்

1. ஹலாஜன் அமிலத்தில் வலிமை குறைந்தது எது?
அ) HI                        ஆ) HBr                        இ) HCl                         ஈ) HF
2. ஒரு தனிமம் அளந்தறியப்பட்ட ஆக்சிஜனுடன் எரிந்து A என்ற ஆக்சைடைத் தருகிறது. B யை வெப்பப்படுத்தினால் C என்ற அமிலத்தை தருகிறது. C சில்வர் நைட் ரேட்டுடன் மஞ்சள்நிற வீழ்படிவைத் தருகிறது. A என்பது  
அ) P2O3                    ஆ) SO2                      இ) CO2                     ஈ) NO2
3.  தொகுதி எண் 14 - ஐச் சேர்ந்த தனிமம் மிருதுவானது. துய நிலையில் நீருடன் வினைபுரியாது. ஆனால் காற்று கலந்த நீரில் கரைகிறது. அந்தத் தனிமம்
அ) C                           ஆ) Ge                           இ) Pb                      ஈ) Ti
4. ஆகாயவிமானங்கள் மலையின் மீது மோதாமல் இருக்க மலையின் மீது பொருத்துகின்ற விளக்குகளில் பயன்படும் மந்த வாயு
அ) ஹீலியம்               ஆ) ஆர்கான்               இ) நியான்                ஈ) செனான்
5. புகைத்திரையில் பயன்படுத்தப்படும் சேர்மம் எது?
அ) PCl3                      ஆ) PCl5                     இ) PH3                      ஈ) H3PO3
6. இரத்தம் உறைதலை ஊக்குவிக்கும் மருந்துகளில் பயன்படும் சேர்மம்
அ) K2SO4           ஆ) பொட்டாஷ் படிகாரம்     இ) Al2(SO4)3         ஈ) KI
7. உள்ளிப் பூண்டின் மணமுடைய சேர்மம் எது?
அ) P2O3                    ஆ) P2O5                 இ) H3PO3                    ஈ) H3PO4
8. கார்பன் தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு
அ) ns2np2                  ஆ) ns2np3               இ) ns2np1                    ஈ) ns2np4.
9. மிகவும் லேசான, எரியாத தனிமம் எது?
அ)  He                      ஆ) H2                        இ) N2                           ஈ) Ar
10. பின்வருவனவற்றுள் உலோகப்போலி
அ) Pb                       ஆ)                             இ) Ge                           ஈ) Sn
11. உயரிய வாயுக்களுக்கு வினைபுரியும் திறன் குறைவு. ஏனெனில் அ) ஒரே எண்ணிக்கையுள்ள எலக்ட்ரான்களை கொண்டுள்ளது 
ஆ) அணுக்கட்டு எண் ஒன்று         இ) குறைந்த அடர்த்தி உடைய வாயுக்கள் 
ஈ) நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன.
12. PCl5 ன் வடிவம் யாது?
அ) இருபிரமிடு                                ஆ) முக்கோண இருபிரமிடு 
இ) நேர்கோட்டு வடிவம்                ஈ) நான்முகி
13. XeF4 ன் வடிவம்
அ) நான்முகி             ஆ) எண்முகி            இ) தளசதுரம்              ஈ) பிரமிடு
14. போரான் தொகுதி தனிமங்களில் நச்சுத் தன்மை உடைய தனிமம்
அ) போரான்           ஆ) இண்டியம்           இ) தாலியம்               ஈ) காலியம்
15. பின்வருவனவற்றுள் எத்தனிமம் 14 வது தொகுதியை சேர்ந்தது அல்ல?
அ) C                        ஆ) Si                          இ) Ga                        ஈ) Pb
16. எது கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது?
அ) HI                       ஆ) HF                       இ) HBr                        ஈ) HCl
17. எது எதிர் (–1) ஆசிஜனேற்ற நிலையில் மட்டும் உள்ளது?
அ) Br                       ஆ) F                          இ) Cl                           ஈ) இ

மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment