April 28, 2012

புறப்பரப்பு வேதியியல் (Surface Chemistry) ஒரு மதிப்பெண்


1. டின்டால் விளைவிற்கு உட்படாதது
அ) பால்மம்                                               ஆ) கூழ்மக்கரைசல்
இ) மெய்க்கரைசல்                                     ஈ) தொங்கல் கரைசல் / ஒன்றுமில்லை
2. பால்மம் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்கரைசல்
அ) இரண்டு திண்மங்கள்                          ஆ) இரண்டு நீர்மங்கள்
இ) இரண்டு வாயுக்கள்                              ஈ) ஒரு திண்மம் மற்றும் ஒரு வாயு
3. களிக்கான சான்று
அ) பெயிண்ட்          ஆ) பியூமைஸ் கல்      இ) பால்                         ஈ) தயிர் 
4. கரைப்பான் கவர் கூழ்மத்திற்கான சான்று 
அ) நீரில் உள்ள சல்பர்                                ஆ) நீரில் உள்ள பாஸ்பரஸ்
இ) ஸ்டார்ச்                                                 ஈ) இவை அனைத்தும்
5. அர்ஜிரால் என்பது
அ) கூழ்ம சில்வர்                                        ஆ) கூழ்ம ஆன்டிமனி
இ) கூழ்ம கோல்ட்                                      ஈ) மக்னீசியா பால்மம்
6. டிகான் முறையில் குளோரின் தயாரித்தலில் வினைவேகமாற்றியாக பயன்படுகிறது 
அ) NO                      ஆ) CuCl2                இ) Fe2O3                      ஈ) Ni 
7. தேங்காய் மட்டை கால்கரி வாயுக்களை ________ தன்மையை அதிகமாக பெற்றுள்ளது அ)  பரப்புக்கவரும்                                    ஆ) உறிஞ்சும் 
இ) வெளியேறும்                                       ஈ) இவை அனைத்தும்
8. கூழ்ம மருந்துகள் எளிதில் உட்கவரப்படக் காரணம்
அ) அவை தூய்மையானவை                     ஆ) அவற்றை எளிதில் தயாரிக்கலாம்
இ) எளிதில் உட்கவரப்பட்டு பரப்புக்கவரப்படுகிறது
ஈ) நோயுண்டாக்கும் கிருமிகளை எளிதில் கவர்தல்
9. கூழ்மங்களை தூய்மைபடுத்தும் முறை
அ) வீழ்ப்படிவாக்கல்                                ஆ) திரிதல் 
இ) டையாலிசிஸ்                                      ஈ) வடிகட்டல்
10. தயிர் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்கரைசல்
அ) நீர்மத்திலுள்ள நீர்மம்                        ஆ) திண்மத்திலுள்ள நீர்மம்
இ) நீர்மத்திலுள்ள திண்மம்                     ஈ) திண்மத்திலுள்ள திண்மம்
11. ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடையும் வேகம் ________ முன்னிலையில் குறைகிறது அ) ஆல்கஹால்                                           ஆ) கிளிசரின்
இ) மாங்கனீசு டை ஆக்சைடு, MnO2         ஈ) மாலிபட்டினம், Mo
12. பால்மக்காரணி________ க்கு சேர்க்கப்படுகிறது.
அ) பால்மம் வீழ்பபடிவாதலுக்கு                               ஆ) பால்மம் திரிதலுக்கு
இ) பால்மத்தை நிலையாக வைத்திருப்பதற்கு            ஈ) இவற்றில் எதுவுமில்லை
13. Fe(OH)3 கூழ்மத்துகள் _______ அயனிகளை பரப்புக் கவருகின்றன
அ) Fe3+                     ஆ) Mg2+                 இ) Ca2+                       ஈ) Cu2+
14. புகை (fog) கூழ்மக்கரைசலில் உள்ளவை
அ) நீர்மத்திலுள்ள வாயு                          ஆ) வாயுவிலுள்ள நீர்மம்
இ) திண்மத்திலுள்ள வாயு                       ஈ) வாயுவிலுள்ள திண்மம்
15. வேதிப் பரப்புக் கவர்தலில் எது தவறானது?
அ) மீளாத்தன்மையுடையது                    ஆ) இதற்கு கிளர்வுறு ஆற்றல் தேவைப்படுகிறது
இ) பரப்புக் கவரும் பொருளின் மீது பல அடுக்குகளை தோற்றுவிக்கிறது
ஈ) பரப்புச் சேர்மங்கள் உருவாகின்றன
16. இயற்பியல் பரப்புக் கவரப்படுதல் __________ ன் போது பரப்புக் கவரப்பட்டுள்ள பொருள் வெளியேறுகிறது 
அ) வெப்பம் குறையும் போது                  ஆ) வெப்பம் உயரும்போது
இ) அழுத்தம் உயரும் போது                     ஈ) செறிவு அதிகரிக்கும்போது
17. நீர்த்த H2SO4 முன்னிலையில் ஆக்சாலிக் அமிலத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் மூலம் ஆக்சிஜனேற்றம் செய்யும் வினையில் தன் வினைவேகமாற்றியாக செயல்படுவது
அ) K2SO4                 ஆ) MnSO4            இ) MnO2                       ஈ) Mn2O3 
18. எண்ணெயில் கரையக் கூடிய சாயத்தை பால்மத்துடன் கலக்கும்போது பால்மம் நிறமற்றதாக இருப்பின் அந்த பால்மம்
அ) O/W                    ஆ) W/O                    இ) O/O                         ஈ) W/W
19. புகைஎன்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்கரைசல்
அ) திண்மத்திலுள்ள வாயு                       ஆ) வாயுவிலுள்ள திண்மம்
இ) நீர்மத்திலுள்ள வாயு                           ஈ) வாயுவிலுள்ள நீர்மம்
20. ஆக்சாலிக் அமிலத்தை KMnO4 மூலம் ஆக்சிஜனேற்றம் செய்யும் வினையில் தன் வினைவேகமாற்றி
அ) K2SO4                ஆ) MnSO4             இ) KMnO4                   ஈ) CO2 
21. வானத்தின் நீலநிறத்திற்கு காரணம் -------
அ) டின்டால் விளைவு                               ஆ) பிரௌனியன் இயக்கம் இ) மின்முனைக் கவர்ச்சி           ஈ) மின்னாற் சவ்வூடு பரவல்
22. KClO3 சிதைவடைதல் வினையில் வினைவேகமாற்றியாக செயல்படுவது
அ) MnO2                  ஆ) Cl2                         இ) V2O5                ஈ) Pt
23. வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக பயன்படும் கூழ்மம் எது?
அ) கூழ்ம சில்வர்                                        ஆ) கூழ்ம ஆன்டிமனி
இ) கூழ்ம கோல்ட்                                       ஈ) மக்னீசியா பால்மம்
24. கூழ்ம பிளாட்டினத்தின் முன்னிலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைதல் _________ க்கான சான்று
அ) ஊக்க வினைவேக மாற்றம்             ஆ) தளர்வு வினைவேக மாற்றம் இ) தன் வினைவேக மாற்றம்                 ஈ) தூண்டப்பட்ட வினைவேக மாற்றம்
25. O/W பால்மத்திற்கு பால்மக்காரணி 
அ) நீண்ட சங்கிலி ஆல்கஹால்                ஆ) விளக்கு கரி
இ) புரோட்டீன்                                         ஈ) கிளிசரால்
26. Fe(OH)3 வீழ்ப்படிவை கூழ்மமாக்கலில் FeClன் பங்கு
அ) கூழ்மமாக்கும் காரணி                       ஆ) பால்மக்காரணி 
இ) ஒடுக்கும் காரணி                                ஈ) வீழ்ப்படிவாக்கும் காரணி
27. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் வினைவேகமாற்றிக்கு நச்சாக ______ அமைகிறது
அ) Pt                        ஆ) H2                      இ) H2S                        ஈ) As2O3
28. கூழ்மத்துகள்கள் மின் புலத்தினால் இடப்பெயர்ச்சி அடைவது 
அ) மின்னியற் சவ்வூடு பரவல்               ஆ) மின்னாற் பகுத்தல் / வெப்ப கூழ்மப்பிரிப்பு
இ) மின்னியற் கூழ்மப்பிரிப்பு                ஈ) எலக்ட்ரோ போரசிஸ்
29. சோடியம் சல்பைட்டானது காற்றினால் ஆக்சிஜனேற்றமடைவதை ______ குறைக்கிறது 
அ) MnO2               ஆ) H2S                      இ) ஆல்கஹால்            ஈ) As2O3
30. SO2 ஆனது ஆக்சிஜனேற்றமடையும் தொடு முறையில் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் வினைவேகமாற்றிக்கு _______ நச்சுப் பொருளாக செயல்படுகிறது
அ) ஆர்சினியஸ் ஆக்சைடு, (As2O3)     ஆ) வனடியம் பெண்டாக்சைடு, (V2O5)
இ) ஃபெரிக் ஆக்சைடு, (Fe2O3)             ஈ) குப்ரிக் குளோரைடு, (CuCl2)
31. வானம் நீலநிறமாக புலப்படுகிறது. காரணம்
அ) பரப்புக் கவரப்படுதல்                       ஆ) விரவல்
இ) எதிரொளித்தல்                                  ஈ) நீலநிற ஒளி சிதறடித்தல்
32. கூழ்மத்துகள்களுக்கான டின்டால் விளைவிற்கு க் காரணம்
அ) ஒளிச் சிதறல்                                      ஆ) மின்சுமை இருப்பதால்
இ) ஒளி உறிஞ்சுதல் / ஒளி விரவல்           ஈ) ஒளி விலகல்
33. வினைவேக மாற்றியினால் வினைவேகம் அதிகரிப்பதை பின்வரும் எந்த காரணி சரியாக கூறுகிறது? 
அ) வடிவத்தை தேர்ந்தெடுத்தல்            ஆ) துகளின் உருவளவு
இ) கட்டிலா ஆற்றல் அதிகரித்தல்         ஈ) கிளர்வு ஆற்றல் குறைதல்
34. கீழ்க்கண்ட வினைவேக மாற்றியின் சிறப்பியல்புகளில் எது தவறானது?
அ) குறைந்த அளவு தேவை                   ஆ) வினையை தொடங்கும்
இ) நிறை மற்றும் வேதிஇயைபில் எத்தகைய மாற்றமும் ஏற்படுவதில்லை
ஈ) தேர்ந்து செயலாற்றும்
35. கரைசால் என்பது எவ்வகைக் கூழ்மக் கரைசல்? 
அ) நீர்மத்திலுள்ள திண்மம்                 ஆ) திண்மத்திலுள்ள நீர்மம்
இ) திண்மத்திலுள்ள திண்மம்              ஈ) திண்மத்திலுள்ள வாயு
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment