April 29, 2012

மின் வேதியியல் - I (Electrochemistry – I) ஒரு மதிப்பெண்


1. CH3COOH சமான கடத்துத்திறன் 25oC ல் 80 ஓம் –1செமீ 2சமானம்–1 மற்றும் அளவிலா நீர்த்தலில் 400 ஓம் –1செமீ 2சமானம்–1. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம் ______
அ) 1                      ஆ) 0.2                           இ) 0.1                           ஈ) 0.3
2. பாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது
அ) நேர் மின் அயனின் அணு எண்           ஆ) எதிர் மின் அயனின் அணு எண்
இ) மின் பகுளியின் சமான எடை              ஈ) நேர் மின் அயனின் வேகம்
3. ஆக்சாலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம்பார்க்கும்போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி ___
அ) பொட்டாசியம் பெர்மாங்கனேட்       ஆ) பினால்ப்தலின்
இ) லிட்மஸ்                                                 ஈ) மெத்தில் ஆரஞ்சு
4. 0.2 ஆம்பியர் மின்னோட்டத்தை 50 நிமிடங்கள் செலுத்தும்போது 0.1978 கி. காப்பர் வீழ்ப்படிவாகிறதெனில் 600 கூலூம் மின்னோட்டத்தில் எவ்வளவு காப்பர் வீழ்ப்படிவாகும்
அ) 19.78 g                ஆ) 1.978 g             இ)  0.1978 g                 ஈ) 197.8 g
5. ஆஸ்வால்ட் விதி பின்வரும் எதற்குப் பொருந்தக்கூடியது?
 அ)CH3COOH            ஆ) NaCl                  இ) NaOH                     ஈ) H2SO4
6. அம்மோனியம் ஹைட்ராக்சைடை ஹைட்ரோக்குளோரிக் அமிலத்துடன் தரம்பார்க்கும் போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி 
அ) KMnO4                                                 ஆ) மெத்தில் ஆரஞ்சு
இ) பினால்ப்தலின்                                     ஈ) லிட்மஸ்
7. 0.1 N NaOH உள்ள கரைசலின் pH 
அ) 1                           ஆ) 10–1                  இ) 13                           ஈ) 10–13
8.10-6 M ஒற்றை காரத்துவ அமிலத்தை 1லிட்டர் கரைப்பானில் கரைத்த பிறகு கரைசலின் pH 
அ) 6                           ஆ) 7                        இ) 4                              ஈ) 6 ஐ விட குறைவு
9. ஒரு கூலூம் மின்னோட்டத்தை ஓர் மின்பகுளி கரைசல் வழியே செலுத்தும்போது மின்வாயில் படியும் பொருளின் நிறை 
அ) சமான நிறை                                        ஆ) மூலக்கூறு எடை
இ) மின் வேதிச் சமான எடை                   ஈ) ஒரு கிராம்
10. ஒரு கரைசலின் pH = 2 எனில் அதில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் செறிவு மோல்/லிட்டரில்
அ) 1 x 10–12             ஆ) 1 x 10–4             இ) 1 x 10–7                   ஈ) 1 x 10–2
11. சோடியம் அசிட்டேட்டை அசிடிக் அமிலத்துடன் சேர்க்கும் போது அசிடிக் அமிலத்தின் பிரிகையாதல் வீதம்______

அ) உயருகிறது                                            ஆ) குறைகிறது

இ) மாறாமல் உள்ளது                                ஈ) ஒன்று / பூச்சியமாகிறது
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

April 28, 2012

புறப்பரப்பு வேதியியல் (Surface Chemistry) ஒரு மதிப்பெண்


1. டின்டால் விளைவிற்கு உட்படாதது
அ) பால்மம்                                               ஆ) கூழ்மக்கரைசல்
இ) மெய்க்கரைசல்                                     ஈ) தொங்கல் கரைசல் / ஒன்றுமில்லை
2. பால்மம் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்கரைசல்
அ) இரண்டு திண்மங்கள்                          ஆ) இரண்டு நீர்மங்கள்
இ) இரண்டு வாயுக்கள்                              ஈ) ஒரு திண்மம் மற்றும் ஒரு வாயு
3. களிக்கான சான்று
அ) பெயிண்ட்          ஆ) பியூமைஸ் கல்      இ) பால்                         ஈ) தயிர் 
4. கரைப்பான் கவர் கூழ்மத்திற்கான சான்று 
அ) நீரில் உள்ள சல்பர்                                ஆ) நீரில் உள்ள பாஸ்பரஸ்
இ) ஸ்டார்ச்                                                 ஈ) இவை அனைத்தும்
5. அர்ஜிரால் என்பது
அ) கூழ்ம சில்வர்                                        ஆ) கூழ்ம ஆன்டிமனி
இ) கூழ்ம கோல்ட்                                      ஈ) மக்னீசியா பால்மம்
6. டிகான் முறையில் குளோரின் தயாரித்தலில் வினைவேகமாற்றியாக பயன்படுகிறது 
அ) NO                      ஆ) CuCl2                இ) Fe2O3                      ஈ) Ni 
7. தேங்காய் மட்டை கால்கரி வாயுக்களை ________ தன்மையை அதிகமாக பெற்றுள்ளது அ)  பரப்புக்கவரும்                                    ஆ) உறிஞ்சும் 
இ) வெளியேறும்                                       ஈ) இவை அனைத்தும்
8. கூழ்ம மருந்துகள் எளிதில் உட்கவரப்படக் காரணம்
அ) அவை தூய்மையானவை                     ஆ) அவற்றை எளிதில் தயாரிக்கலாம்
இ) எளிதில் உட்கவரப்பட்டு பரப்புக்கவரப்படுகிறது
ஈ) நோயுண்டாக்கும் கிருமிகளை எளிதில் கவர்தல்
9. கூழ்மங்களை தூய்மைபடுத்தும் முறை
அ) வீழ்ப்படிவாக்கல்                                ஆ) திரிதல் 
இ) டையாலிசிஸ்                                      ஈ) வடிகட்டல்
10. தயிர் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்கரைசல்
அ) நீர்மத்திலுள்ள நீர்மம்                        ஆ) திண்மத்திலுள்ள நீர்மம்
இ) நீர்மத்திலுள்ள திண்மம்                     ஈ) திண்மத்திலுள்ள திண்மம்
11. ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடையும் வேகம் ________ முன்னிலையில் குறைகிறது அ) ஆல்கஹால்                                           ஆ) கிளிசரின்
இ) மாங்கனீசு டை ஆக்சைடு, MnO2         ஈ) மாலிபட்டினம், Mo
12. பால்மக்காரணி________ க்கு சேர்க்கப்படுகிறது.
அ) பால்மம் வீழ்பபடிவாதலுக்கு                               ஆ) பால்மம் திரிதலுக்கு
இ) பால்மத்தை நிலையாக வைத்திருப்பதற்கு            ஈ) இவற்றில் எதுவுமில்லை
13. Fe(OH)3 கூழ்மத்துகள் _______ அயனிகளை பரப்புக் கவருகின்றன
அ) Fe3+                     ஆ) Mg2+                 இ) Ca2+                       ஈ) Cu2+
14. புகை (fog) கூழ்மக்கரைசலில் உள்ளவை
அ) நீர்மத்திலுள்ள வாயு                          ஆ) வாயுவிலுள்ள நீர்மம்
இ) திண்மத்திலுள்ள வாயு                       ஈ) வாயுவிலுள்ள திண்மம்
15. வேதிப் பரப்புக் கவர்தலில் எது தவறானது?
அ) மீளாத்தன்மையுடையது                    ஆ) இதற்கு கிளர்வுறு ஆற்றல் தேவைப்படுகிறது
இ) பரப்புக் கவரும் பொருளின் மீது பல அடுக்குகளை தோற்றுவிக்கிறது
ஈ) பரப்புச் சேர்மங்கள் உருவாகின்றன
16. இயற்பியல் பரப்புக் கவரப்படுதல் __________ ன் போது பரப்புக் கவரப்பட்டுள்ள பொருள் வெளியேறுகிறது 
அ) வெப்பம் குறையும் போது                  ஆ) வெப்பம் உயரும்போது
இ) அழுத்தம் உயரும் போது                     ஈ) செறிவு அதிகரிக்கும்போது
17. நீர்த்த H2SO4 முன்னிலையில் ஆக்சாலிக் அமிலத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் மூலம் ஆக்சிஜனேற்றம் செய்யும் வினையில் தன் வினைவேகமாற்றியாக செயல்படுவது
அ) K2SO4                 ஆ) MnSO4            இ) MnO2                       ஈ) Mn2O3 
18. எண்ணெயில் கரையக் கூடிய சாயத்தை பால்மத்துடன் கலக்கும்போது பால்மம் நிறமற்றதாக இருப்பின் அந்த பால்மம்
அ) O/W                    ஆ) W/O                    இ) O/O                         ஈ) W/W
19. புகைஎன்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக்கரைசல்
அ) திண்மத்திலுள்ள வாயு                       ஆ) வாயுவிலுள்ள திண்மம்
இ) நீர்மத்திலுள்ள வாயு                           ஈ) வாயுவிலுள்ள நீர்மம்
20. ஆக்சாலிக் அமிலத்தை KMnO4 மூலம் ஆக்சிஜனேற்றம் செய்யும் வினையில் தன் வினைவேகமாற்றி
அ) K2SO4                ஆ) MnSO4             இ) KMnO4                   ஈ) CO2 
21. வானத்தின் நீலநிறத்திற்கு காரணம் -------
அ) டின்டால் விளைவு                               ஆ) பிரௌனியன் இயக்கம் இ) மின்முனைக் கவர்ச்சி           ஈ) மின்னாற் சவ்வூடு பரவல்
22. KClO3 சிதைவடைதல் வினையில் வினைவேகமாற்றியாக செயல்படுவது
அ) MnO2                  ஆ) Cl2                         இ) V2O5                ஈ) Pt
23. வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக பயன்படும் கூழ்மம் எது?
அ) கூழ்ம சில்வர்                                        ஆ) கூழ்ம ஆன்டிமனி
இ) கூழ்ம கோல்ட்                                       ஈ) மக்னீசியா பால்மம்
24. கூழ்ம பிளாட்டினத்தின் முன்னிலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைதல் _________ க்கான சான்று
அ) ஊக்க வினைவேக மாற்றம்             ஆ) தளர்வு வினைவேக மாற்றம் இ) தன் வினைவேக மாற்றம்                 ஈ) தூண்டப்பட்ட வினைவேக மாற்றம்
25. O/W பால்மத்திற்கு பால்மக்காரணி 
அ) நீண்ட சங்கிலி ஆல்கஹால்                ஆ) விளக்கு கரி
இ) புரோட்டீன்                                         ஈ) கிளிசரால்
26. Fe(OH)3 வீழ்ப்படிவை கூழ்மமாக்கலில் FeClன் பங்கு
அ) கூழ்மமாக்கும் காரணி                       ஆ) பால்மக்காரணி 
இ) ஒடுக்கும் காரணி                                ஈ) வீழ்ப்படிவாக்கும் காரணி
27. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் வினைவேகமாற்றிக்கு நச்சாக ______ அமைகிறது
அ) Pt                        ஆ) H2                      இ) H2S                        ஈ) As2O3
28. கூழ்மத்துகள்கள் மின் புலத்தினால் இடப்பெயர்ச்சி அடைவது 
அ) மின்னியற் சவ்வூடு பரவல்               ஆ) மின்னாற் பகுத்தல் / வெப்ப கூழ்மப்பிரிப்பு
இ) மின்னியற் கூழ்மப்பிரிப்பு                ஈ) எலக்ட்ரோ போரசிஸ்
29. சோடியம் சல்பைட்டானது காற்றினால் ஆக்சிஜனேற்றமடைவதை ______ குறைக்கிறது 
அ) MnO2               ஆ) H2S                      இ) ஆல்கஹால்            ஈ) As2O3
30. SO2 ஆனது ஆக்சிஜனேற்றமடையும் தொடு முறையில் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் வினைவேகமாற்றிக்கு _______ நச்சுப் பொருளாக செயல்படுகிறது
அ) ஆர்சினியஸ் ஆக்சைடு, (As2O3)     ஆ) வனடியம் பெண்டாக்சைடு, (V2O5)
இ) ஃபெரிக் ஆக்சைடு, (Fe2O3)             ஈ) குப்ரிக் குளோரைடு, (CuCl2)
31. வானம் நீலநிறமாக புலப்படுகிறது. காரணம்
அ) பரப்புக் கவரப்படுதல்                       ஆ) விரவல்
இ) எதிரொளித்தல்                                  ஈ) நீலநிற ஒளி சிதறடித்தல்
32. கூழ்மத்துகள்களுக்கான டின்டால் விளைவிற்கு க் காரணம்
அ) ஒளிச் சிதறல்                                      ஆ) மின்சுமை இருப்பதால்
இ) ஒளி உறிஞ்சுதல் / ஒளி விரவல்           ஈ) ஒளி விலகல்
33. வினைவேக மாற்றியினால் வினைவேகம் அதிகரிப்பதை பின்வரும் எந்த காரணி சரியாக கூறுகிறது? 
அ) வடிவத்தை தேர்ந்தெடுத்தல்            ஆ) துகளின் உருவளவு
இ) கட்டிலா ஆற்றல் அதிகரித்தல்         ஈ) கிளர்வு ஆற்றல் குறைதல்
34. கீழ்க்கண்ட வினைவேக மாற்றியின் சிறப்பியல்புகளில் எது தவறானது?
அ) குறைந்த அளவு தேவை                   ஆ) வினையை தொடங்கும்
இ) நிறை மற்றும் வேதிஇயைபில் எத்தகைய மாற்றமும் ஏற்படுவதில்லை
ஈ) தேர்ந்து செயலாற்றும்
35. கரைசால் என்பது எவ்வகைக் கூழ்மக் கரைசல்? 
அ) நீர்மத்திலுள்ள திண்மம்                 ஆ) திண்மத்திலுள்ள நீர்மம்
இ) திண்மத்திலுள்ள திண்மம்              ஈ) திண்மத்திலுள்ள வாயு
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

வேதிவினை வேகவியல் - II (Chemical Kinetics – II) ஒரு மதிப்பெண்

1. ஒரு முதல் வகை வினை 20 நிமிடங்களில் 50% நிறைவு பெறுகிறது எனில் 75% நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
அ) 60 நிமிடங்கள்                                   ஆ) 10 நிமிடங்கள்
இ) 40 நிமிடங்கள்                                   ஈ) 80நிமிடங்கள்
2. CCl4 ஊடகத்தில் நைட்ரஜன் பென்டாக்சைடு சிதைவடையும் வினை _________ வினைக்கான சான்று
அ) இரண்டாம் வகை                                 ஆ) மூன்றாம் வகை
இ) பூஜ்ய வகை                                           ஈ) முதல் வகை
3. ஒரு வினையில் Ea = 0 மற்றும் 300 K ல் k = 4.2 X 105 sec–1 எனில் 310 K ல்
k ன் மதிப்பு
அ) 4.2 X 105 sec–1                                   ஆ) 8.4 X105 sec–1 
இ) 8.4 X 105 sec–1                                   ஈ) 4.2 x 10-5 sec–1 / நிர்ணயிக்க இயலாது  
4. aA → bB,  என்ற  வினையில்  வினைவேகம்  இருமடங்காக்கும்போது  A ன் செறிவு  நான்கு மடங்காகும்.  இவ் வினையின் 
அ) k [A]a                   ஆ) k [A]½                  இ) k [A]1/a                  ஈ) k [A]
5. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்வு  20 நிமிடங்கள். அவ் வினை 99.9% முற்றுப்பெற எடுத்துக்கொள்ளும் நேரம்
அ) 20 நிமிடங்கள்                                       ஆ) 2000 நிமிடங்கள்
இ) 250 வினாடிகள்                                      ஈ) 200 நிமிடங்கள்
6. எஸ்டரை நீர்த்த HCl முன்னிலையில் நீராற்பகுத்தல் வினையின் வினைவகை
அ) பூஜ்ஜிய வகை                                       ஆ) முதல்வகை வினை
இ) இரண்டாம் வகைவினை                      ஈ) போலி முதல்வகை வினை
7. கிளர்வுறு ஆற்றல் மதிப்பு அதிகமாக இருக்கும்போது ஒரு வினையின் வினைவேகம் ________ ஆக இருக்கும் 
அ) அதிகமாக        ஆ) மிதமாக            இ) குறைவாக             ஈ) கணிக்கமுடியாததாக
8. ஒரு முதல்வகை வினையில் வினைபடுபொருளின் செறிவை இருமடங்காக்கும் போது வினைவேகமானது  தொடக்க வினை வினைவேகத்தை போன்று ______ அதிகரிக்கும்
அ) 2 மடங்காக         ஆ) 4 மடங்காக          இ) 10 மடங்காக         ஈ) 6 மடங்காக
9. வினைபடு மூலக்கூறுகள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட வழிகளில் வினைபட்டு வெவ்வேறு வினைவிளை பொருள்களை தரும் வினை
அ) அடுத்தடுத்து நிகழும் வினை               ஆ) இணை வினை
இ) எதிரெதிர் வினை                                  ஈ) சங்கிலி வினை
10. மூலக்கூறு கிளர்வுறுவதற்கு தேவைப்படும் அதிகபட்ச ஆற்றல் 
அ) இயக்க ஆற்றல்                                     ஆ) நிலை ஆற்றல்
இ) கிளர்வுறு ஆற்றல்                                   ஈ) குறைந்தபட்ச ஆற்றல்
11. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 0.0693 min–1. அவ் வினை 50% நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
அ) 10 min               ஆ) 1 min                      இ) 100 min              ஈ) 50 min
12. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்காலம் 10 நிமிடங்கள் எனில் அதன் வினைவேக மாறிலி 
அ) 6.93 X 102min–1                                  ஆ) 0.693 X 10–2min–1 
இ) 6.932 X 10–2min–1                              ஈ) 69.3 X 10–1min–1
13. வினைவேக சமன்பாட்டிலுள்ள செரிவுகளின் அடுக்குகளின் கூடுதல் 
அ) மூலக்கூறு எண்                                    ஆ) வினைவகை
இ) வினைவேகம்                                        ஈ) வினைவேக மாறிலி
14. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்காலம் 100 நிமிடங்கள். அந்த வினையின் வினைவேக மாறிலி 
அ) 6.93 x 103 நிமிடங்கள் –1                     ஆ) 0.693 x 10–1 நிமிடங்கள் –1
இ) 6.93 x 10-3 நிமிடங்கள்                          ஈ) 69.3 x 10–2 நிமிடங்கள்
15. பூஜ்ஜிய வகை வினையின் வினைவேக மாறிலியின் அலகு

அ) லிட்டர் மோல் விநாடி–1                        ஆ) மோல் விநாடி–1 லிட்டர்–1 

இ) விநாடி–1                                                  ஈ) ­லிட்டர்2 விநாடி–1

மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

April 25, 2012

வேதிச்சமநிலை - II (Chemical Equilibrium – II) ஒரு மதிப்பெண்

1. 2H2O(g)+2Cl2(g) ⇌ 4HCl(g)+5O2(g), வினைக்கு Kp மற்றும் Kc மதிப்புக்கு
இடையோயான தொடர்பு
அ) Kp = Kc               ஆ) Kp > Kc                     இ) Kp< Kc                ஈ) Kp = Kc = 0.
2. 600 K வெப்பநிலையில் நிகழும் பின்வரும் ஒருபடித்தான வாயு சமநிலை வினையில் Kc- யின் அலகு 4NH3(g) + 5O2(g)⇌ 4NO(g) + 6H2O(g) 
அ) (mol dm–3)–1     ஆ) (mol dm3)               இ) (mol dm–3)4       ஈ) (mol dm–3)–2
3. ஒரு வெப்பம்கொள் சமநிலை வினையில் T1 மற்றும் T2 வெப்பநிலைகளில்  சமநிலை மாறிலிகள் K1 மற்றும் Kஎனில் வெப்பநிலை T2 ஆனது T1 வை விட  அதிகமாக  இருக்கும்போது (T2 >T1)
அ) K1 < K2             ஆ) K1 > K2                    இ) K1 = K2                ஈ) ஏதும் இல்லை /
அ) K1 ஆனது K2 ஐ விட குறைவு                ஆ) K1 ஆனது Kஐ விட அதிகம்
இ) K1ஆனது K2 க்கு சமம்                            ஈ) ஏதும் இல்லை
4. முன்னோக்கு வினை நிகழ்வது _____ ஆக இருக்கும்போது சாத்தியமாகிறது
அ) Q < kc                ஆ) Q > kc                     இ) Q = kc                     ஈ) kc = 1/Q
5. H2(g) + I2(g) ⇌ 2 HI(g) என்ற சமநிலை வினைக்கு சமநிலை மாறிலி Kc -யின் மதிப்பு 16. Kp- யின் மதிப்பு
அ) 1 / 16                   ஆ) 4                            இ) 64                           ஈ) 16.
6. ஒரு வினைவிளைபொருளின் உருவாதல் சமநிலை மாறிலி 25. அதே வினைவிளை பொருளின் பிரிகை சமநிலை மாறிலி 
அ) 25                        ஆ) 1 / 25                     இ) 5                            ஈ) 625.
7. பின்வரும் வினைகளுக்கு சமநிலை மாறிலிகள் 2A ⇌ B-க்கு K1-ம் B ⇌ 2A-க்கு K2-ம் ஆகும் எனில் 
அ) K1 = 2K2           ஆ) K1 = 1/K2             இ) K2 = (K1)2          ஈ) K1 = 1/K22
8. 2O3 ⇌ 3O2 வினைக்கு Kc -யின் மதிப்பு 
அ) [O3]3 / [O2]2      ஆ) [O2]2 / [O3]3        இ) [O2]3 / [O3]2       ஈ) [O3] / [O2]
9. N2 + 3H2 ⇌ 2NH3 என்ற சமநிலையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது அ) குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை 
ஆ) குறைந்த அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
இ) அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை
ஈ) அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
10. ஹேபர் முறையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது
அ) அதிக அழுத்தத்தில்                               ஆ) குறைந்த அழுத்தத்தில் இ) அதிக வெப்பநிலையில்                        ஈ) வினையூக்கி இல்லாதபோது
11. 2HI(g) ⇌ H2(g) + I2(g), என்ற சமநிலை வினையில் Kp ஆனது
அ) Kc  ஐ விட அதிகம்                             ஆ) Kc  ஐ விட குறைவு
இ) Kc க்கு சமம்                                          ஈ) பூஜ்ஜியம் / ௦0
12. Nமற்றும் H2 ஆகியவற்றிலிருந்து NH3 தயாரித்தல் வினையில் Kc -ன் அலகு
அ) lit2 mol–2            ஆ) atm–2               இ) lit atm–1                    ஈ) atm-l
13. வேதிச்சமநிலையின் தன்மை 
அ) இயங்குச் சமநிலை                           ஆ) நிலையானது
இ) இரண்டும்                                           ஈ) ஒன்றுமில்லை
14. 2A ⇌ B என்ற வினையின் 900K-ல் சமநிலை மாறிலியின் மதிப்பு 25 mol-1 dm3 எனில் B ⇌ 2A வினையின் சமநிலை மாறிலியின் மதிப்பை அதே வெப்பநிலையில் dm-3 mol-ல் கணக்கிடு.
அ) 25                       ஆ) 625                      இ) 0.04                          ஈ) 0.4.
15. வினைபடு பொருட்களின் ஒரு பகுதி பின்னம் சிதைவடைவது _________ எனப்படுகிறது
அ) பிரிகைசமநிலை                                ஆ) சேர்க்கை வீதம்
இ) பிரிகை வீதம்                                      ஈ) பிரிகை மாறிலி
16. ஹேபர் முறையில் அதிக பட்சமாக அம்மோனியா உருவாதல் 
அ) 78%                   ஆ) 97%                   இ) 37%                            ஈ) 89%
17. தொடுமுறையில் SO3 தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சமன்  செய்யப்பட்ட வெப்பநிலை எல்லை  
அ) 400°C to 450°C                                ஆ) 1800°C to 2700°C
இ) 500°C to 550°C                                 ஈ) 350°C to 450°C
18. முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேக மாறிலி முறையே 8 × 10-5 மற்றும் 2 × 10- 4. Kc -யின் மதிப்பு 
அ) 0.04                    ஆ) 0.02                   இ) 0.2                             ஈ) 0.4
19. 2H2O(g) + 2Cl2(g) ⇌ 4HCl(g) + O2(g) என்ற சமநிலைவினைக்கு Kp மற்றும் Kc -க்கு  இடையேயான தொடர்பு 
அ) Kp = Kc            ஆ) Kp = Kc(RT)2     இ) Kp = Kc(RT)1       ஈ) Kp = Kc(RT)–2.
 20. காற்று வெளியேற்றப்பட்ட 1.0 dm3 கொள்ளளவுள்ள கலத்தில் இரு மோல்கள் NH3 வாயு செலுத்தப்பட்டது. உயர் வெப்பநிலையில் NH3 சிதைந்து சமநிலையில் ஒரு மோல் NH3 மட்டும் எஞ்சி நின்றது. இச்சிதைவு வினையின் Kc மதிப்பு 
அ) 27/16 (mole dm–3)2                         ஆ) 27/8 (mole dm–3)2 
இ) 27/4 (mole dm–3)2                            ஈ) இவற்றுள் ஏதுமில்லை
21. ஒருப்படித்தான சமநிலை வினைக்கு Δng  நேர்க்குறியாக இருக்கும்போது
அ) Kp = Kc               ஆ) Kp > Kc           இ) Kc > Kp                    ஈ) Kp = 2Kc
22. வெப்பநிலையை உயர்த்துவது கீழ்க்கண்ட எந்த வாயு நிலைமையிலுள்ள சமநிலை வினை நிகழ்வதற்கு சாதகமாகிறது?
அ) N2O4 ⇌ 2NO2; ΔH = + 59 kJ mol–1 ஆ) N2+3H2 ⇌ 2NH3: ΔH = - 22 kcal mol–1 
இ) 2SO2+O2 ⇌ 2SO3 ΔH = - 47 k cal mol–1          ஈ) (ஆ) மற்றும் (இ). 
23. கீழ்க்கண்டவற்றுள் எதற்கு Δng எதிர்க்குறி மதிப்பாக இருக்கும்?

அ) H2(g)+ I2(g) ⇌ 2HI(g)                          ஆ) PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g) 

இ) 3H2(g) + N2(g) ⇌ 2NH3(g)                  ஈ) 2H2O(g) + 2Cl2(g) ⇌ 4HCl(g) + O2(g).
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்