1. Mn3+ அயனிகளைவிட Mn2+ அயனிகள் அதிக நிலைப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. ஏன்? விளக்குக.
வெளிவட்ட எலக்ட்ரான் அமைப்பு
Mn (Z = 25) – 3d54s2
Mn2+ – 3d5 (பாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பு)
மற்றும் Mn3+ – 3d4
பகுதியளவு நிரம்பிய 3d-ஆர்பிட்டாலைக் கொண்டுள்ள Mn3+ஐ ஒப்பிடும்போது Mn2+பாதி நிரம்பிய, நிலைப்புத்தன்மையுடைய 3d ஆர்பிட்டாலைக் கொண்டுள்ளது.
அல்லது
சீர்மை காரணமாக Mn2+- ல் பாதி நிரம்பிய 3d – ஆர்பிட்டால்கள் Mn3+ஐ விட அதிக நிலைப்புத்தன்மையை பெற்றுள்ளன (ஹுண்ட் விதி).
எனவே, Mn3+யை விட Mn2+ அதிக நிலைப்புத்தன்மையைக் கொன்டுள்ளது.
2. ஜிங்க் உடன் அடர் NaOH கரைசலின் வினை யாது?
ஜிங்க் அடர் NaOH கரைசலுடன் வினைபுரிந்து கரையக்கூடிய ஜிங்கேட் அயனியை உண்டாக்குகிறது.
Zn + 2NaOH + 2H2O →Na2ZnO2 + H2O
3. இடைநிலை உலோகச் சேர்மங்கள் திட அல்லது கரைசல் நிலையில் நிறமுள்ளவையாக உள்ளன. ஏன்?
இடைநிலை உலோக அயனிகளின் நிறத்திற்குக் காரணம்:
1. தனித்த எலக்ட்ரான் அமைப்பு மற்றும்
2. ஒரே d-இணை கூட்டில் உள்ள அடுத்தடுத்த ஆற்றல் மட்டங்களுக்கு இடையேயான சிறிய ஆற்றல் மட்ட வேறுபாடு.
3. எனவே, ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து மற்றொரு மட்டத்திற்குச் செல்ல குறைந்த அளவு ஆற்றல் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை எளிதாக கட்புலனாகும் ஒளியினால் கூட தர இயலும்.
4. எனவே, உறிஞ்சப்பட்ட ஒளிக்கு ஈடான மற்றொரு நிறத்தைக் கொடுக்கிறது.
4. d- தொகுதி தனிமங்கள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதேன்?
1. இந்தத் தனிமங்களில் பல (n-1)d மற்றும் ns எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன.
2. (n-1)d மற்றும் ns ஆர்பிட்டாலுக்கும் உள்ள ஆற்றல் வேறுபாடு மிகக் குறைவாக உள்ளதேயாகும்.
5. இடைநிலைத் தனிமங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவத் ஏன்?
1. சிறிய உருவளவு மற்றும் அதிக நேர்மின் அடர்த்தி.
2. காலியான (n-1)d ஆர்பிட்டால்களை பெற்றதால் அவை ஈனிகளில் உள்ள தனித்த மற்றும் பிணைப்பில் ஈடுபடாத தனித்த இணை எலக்ட்ரான்களை பெற்று பிணைப்பை தோற்றுவிக்கிறது.
6. சிறு குறிப்பு வரைக - குரோம் முலாம் பூசுதல்.
பொதுவாக குரோம் முலாம் பூசுவதற்கு முன்பு நிக்கல் முலாம் பூசப்படுகிறது.
எதிர்மின்வாய் - குரோம் முலாம் பூசவேண்டிய பொருள்
நேர்மின்வாய் - லெட் தகடு
மின்பகுளி - குரோமிக் அமிலம் + சல்ஃபியூரிக் அமிலம்
மின்னாற் பகுக்கும் போது குரோமியம் பொருளின் மீது (எதிர்மின்வாய்) படிகிறது.
7. கோல்ட் ராஜதிராவகத்துடன் புரியும் வினைக்கான சமன்பாடு எழுதுக.
கோல்ட் ராஜதிராவகத்துடன் (3 பகுதி அடர்.HCl + 1 பகுதி அடர்.HNO3) கரைந்து ஆரிக் குளோரைடைத் தருகிறது.
2Au + 9 HCl + 3HNO3 → 2AuCl3 + 6H2O + 3NOCl
8. ஒரு பொருளின் காந்தத் திருப்புத்திறன் 3.9 BM என்றால் அது எத்தனை தனித்த எல்க்ட்ரான்களைக் கொண்டிருக்கும்?
இருபுறமும் வர்க்கப்படுத்த
15.21 = n2 + 2n
n2 + 2n – 15 = 0
n2 + 5n – 3n – 15 = 0
n(n + 5) – 3(n + 5) = 0
(n + 5) (n – 3) = 0
n + 5 = 0 n – 3 = 0
n = – 5 பொருந்தாது n = + 3
∴ தனித்த எலக்ட்ரான்கள், n = 3
9. குரோமைல் குளோரைடு சோதனை என்றால் என்ன? சமன்பாடு தருக.
K2Cr2O7 ஏதாவது ஒரு குளோரைடு மற்றும் அடர் H2SO4 உடன் சூடு செய்தால் ஆரஞ்சு சிவப்பு நிற குரோமைல் குளோரைடு ஆவி கிடைக்கின்றன.
K2Cr2O7 + 4KCl + 6H2SO4 → 2CrO2Cl2 + 6KHSO4 + 3H2O
இந்த வினை பண்பறி பகுப்பாய்வில் குளோரைடு அயனியை கண்டறியப் பயன்படுகிறது
10. காப்பர் மின்னாற் தூய்மையாக்கலை விளக்குக.
நேர்மின்வாய் - தூய்மையற்ற காப்பர்
எதிர்மின்வாய் - தூய காப்பர்
மின்பகுளி - CuSO4 + சல்ஃபியூரிக் அமிலம், H2SO4
மின்பகுளியின் வழியாக மிசாரத்தை செலுத்தும் போது தூய காப்பர் எதிர்மின்வாயில் படிகிறது. மாசுக்கள் நேர்மின்வாய்க்கருகில் குவியலாக படிகிறது. இது ஆனோடு மணல் (Anode mud) எனப்படுகிறது.
11. K2Cr2O7 &ன் ஆக்ஸிஜனேற்ற பண்புக்கு சில சான்றுகள் தருக.
K2Cr2O7 ஒரு வலிவு மிக்க ஆக்ஸிஜனேற்ற கரணி. நீர்த்த. H2SO4 முன்னிலையில், ஒரு மோல் சேர்மம் சிதைவடைந்து மூன்று ஆக்ஸிஜன் அணுவைத் தருகிறது.
K2Cr2O7 + 4 நீர்த்த. H2SO4 → K2SO4 + Cr2 (SO4)3 + 4H2O+ 3(O)
K2Cr2O7, KI - லிருந்து I2 ஐ வெளியேற்றுதல்
K2Cr2O7 + 7H2SO4 + 6KI → 4K2SO4 + Cr2 (SO4)3 + 3I2 + 7H2O
K2Cr2O7, ஃபெரஸ் உப்பை ஃபெரிக் ஆக ஆக்ஸிஜனேற்றமடையச் செய்தல்
K2Cr2O7 + 7H2SO4 + 6 FeSO4 → K2SO4 + Cr2 (SO4)3 + 3Fe2 (SO4)3+ 2H2O
K2Cr2O7, H2S & ஐ S ஆக ஆக்ஸிஜனேற்றமடையச் செய்தல்
K2Cr2O7 + 4H2SO4 + 3H2S → K2SO4 + Cr2 (SO4)3 + 7H2O + 3S
12. கேசியஸ் ஊதா எவ்வாறு தயாரிக்கபடுகிறது?
மிக நீர்த்த கோல்டு குளோரைடுடன் ஸ்டேனஸ் குளோரைடை வினைப்படுத்தினால் கேசியஸ் ஊதா கிடைக்கிறது.
2AuCl3 + 3SnCl2 → 2Au↓ + 3SnCl4
SnCl4 + 4H2O → Sn(OH)4 + 4HCl
13. காப்பர் சல்பேட் நீர்மக்கரைசலுடன் KI கரைசலைச் சேர்க்கும் பொழுது என்ன நிகழ்வு எற்படும்?
காப்பர் சல்பேட் பொட்டாசியம் அயோடைடுடன் வினைப்பட்டு வெண்மை நிற குப்ரஸ் அயோடைடு வீழ்படிவைத் தருகிறது.
CuSO4 + 2KI → CuI2 + K2SO4
(நிலையற்றது)
2CuI2 → Cu2I2 + I2
(வெண்மை நிற வீழ்படிவு)
14. "சில்வர் உமிழ்தல்" என்றால் என்ன? அதை எவ்வாறு தடுக்கலாம்?
உருகிய நிலையில் சில்வரானது அதன் கன அளவைப் போல 20 மடங்கு ஆக்ஸிஜனை உட்கொள்ளும் தன்மையுடயதாகும். இதனை குளிர்விக்கும் போது உறி்ஞ்சிய ஆக்ஸிஜன் வெளியேறுகிறது. இதற்கு "சில்வர் உமிழ்தல்" என்று பெயர்.
இச்செயலை உருகிய சில்வரின் மீது கரிபடலத்தை ஏற்படுத்துவதன் மூலம் தடுக்கலாம்.
15. காப்பர் சல்பேட் படிகங்களை வெப்பப்படுத்தும் பொழுது என்ன விளைவு எற்படும்? சமன்பாடு தருக.
CuSO4.5H2O வை வெப்பப்படுத்தும் பொழுது தனது படிக நீரை முற்றிலும் இழந்து, பின் 720°C -ல் சிதைந்து குப்ரிக் ஆக்சைடாகவும், SO3 ஆகவும் மாறுகிறது.
100°C 230°C 720°C
CuSO4 .5H2O → CuSO4.H2O → CuSO4 → SO3 + CuO
(நீலம்) – 4H2O – H2O (வெண்மை)
16. காப்பர் சல்பேட் KCN உடன் புரியும் வினை யாது?
காப்பர் சல்பேட் KCN உடன் வினைபுரிந்து மஞ்சள் நிற குப்ரிக் சயனைடைத் தருகிறது. இது எளிதில் சிதைவடைந்து சயனோஜெனைத் தருகிறது.
CuSO4 + 2KCN → Cu(CN)2 + K2SO4
2Cu(CN)2 → Cu2(CN)2 + (CN)2
17. Ni2+ உப்புகள் நிறமுள்ளவையாக உள்ளன. ஆனால் Zn2+ உப்புகள் மட்டும் வெண்மையாக உள்ளன. ஏன்?
வெளிவட்ட எலக்ட்ரான் அமைப்பு
Zn (Z = 30) – 3d104s2 மற்றும் Ni (Z = 28) – 3d84s2
↑↓
|
↑↓
|
↑↓
|
↑↓
|
↑↓
|
Zn2+ – 3d10
மற்றும்
↑↓
|
↑↓
|
↑↓
|
↑
|
↑
|
Ni2+ – 3d8
ஜிங்க், Zn2+ உப்புகள் எலக்ட்ரான்கள் இடப்பெயர்ச்சியாவதற்கு தேவையான காலியான d-ஆர்பிட்டல்களைப் பெற்றிருக்காததால் (அல்லது முற்றிலும் நிரப்பப்பட்ட d& ஆர்பிட்டல்களைப் பெற்றுள்ளதால்) வெண்மையாக உள்ளன.
Ni2+உப்புகள் எலக்ட்ரான்கள் இடப்பெயர்ச்சியாவதற்கு தேவையான 2 தனித்த எலக்ட்ரான்களை d-இணை கூட்டில் பெற்றுள்ளன. Ni2+உப்புகள் கட்புலனாகும் ஒளியினால், உறிஞ்சப்பட்ட ஒளிக்கு ஈடான பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன.
18. லூனார் காஸ்டிக் எவ்வாறு
தயாரிக்கபடுகிறது?
19. சில்வர் நைட்ரேட்டை வெப்பப்படுத்தும்
பொழுது நிகழ்வதென்ன?
20. நைக்ரோமின்
இயைபு, சதவீதம் மற்றும் பயனைத் தருக
21. K2Cr2O7 ஐ வெப்பப்படுத்தும் போது ஏற்படும் விளைவு யாது?
22. இடைநிலைத் தனிமங்களும் அவற்றின் சேர்மங்களும் வினையூக்கிகளாக செயல்படுவதேன்?
23. இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவையை உருவாக்குவது ஏன்?
24. பிளாசபர் கம்பளி /
பிளாசபர் உல் என்றால் என்ன? அது எவ்வாறு பெறப்படுகிறது?
25. காப்பரின் இரண்டு உலோகக்கலவையை எழுதி
அதன் பயன்களைக் கூறுக.
26. போர்டோக் கலவை என்பது என்ன? அதன் பயன் யாது?
27. அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் பார்மிக் அமிலத்துடன்
புரியும் வினையை தருக.
28. பொட்டாசியம் குரோமேட் பொட்டாசியம்டை குரோமேட்டாக மாற்றப்படுகிறது மேற்கூறிய வினையில் நிகழும் நிறமாற்றத்தை கூறுக.
29. ஒரு இடைநிலைத் தனிமத்தில்
3
தனித்த எலக்ட்ரான்களைக்
கொண்டிருக்கின்றன
எனில்
அதன் காந்தத்திருப்புத்திறனை கணக்கிடுக.
30. லூனார் காஸ்டிக் என்றால்
என்ன? அது எவ்வாறு தயாரிக்கபடுகிறது?
அலகு – 5 f - தொகுதித் தனிமங்கள்
1. உள் இடைநிலைத் தனிமங்கள் (f
– தொகுதி) என்றால் என்ன? இரு சான்றுகள் தருக.
2. இடைநிலைத்தனிமங்கள் மற்றும் உள் இடைநிலைத் தனிமங்களின்
எலக்ட்ரான் அமைப்புகளில் உள்ள வேறுபாடு என்ன?
3. லாந்தனைடுகள் என்றால் என்ன? லாந்தனைடுகளின் பல்வேறு ஆக்ஸிஜனேற்ற நிலைகள் யாவை?
4. மிஷ் உலோகம் என்றால் என்ன? அவற்றின் பயன்களை எழுதுக.
5. லாந்தனைடுகளின் + 3
ஆக்ஸிஜனேற்ற நிலை மிகவும் நிலையானது
- காரணம் கூறு.
6. சில 4f தொகுதி தனிமங்கள் அவற்றின்
சிறப்பியல்பான + 3 ஆக்ஸிஜனேற்ற நிலையுடன் + 2 அல்லது + 4 ஆக்ஸிஜனேற்ற
நிலையையும் காட்டுகின்றன
- காரணம் கூறு.
7. லாந்தனைடுகள் ஒரே தொகுதியாக ஆக்கப்பட்டுள்ளன - காரணம் கூறு.
8. La(OH)3 மற்றும் Lu(OH)3 ஆகியவற்றை ஒப்பிட்டால் அதிக காரத்தன்மை கொண்டது எது? ஏன் என விளக்குக.
9. தனிம வரிசை
அட்டவணையில் லாந்தனைடுகளின் இடம் பற்றி விரிவாக எழுதுக?
அலகு – 6 அணைவுச் சேர்மங்கள்
1. எளிய
உப்பு என்றால் என்ன? சான்றுகள் தருக.
2. இரட்டை
உப்பு என்றால் என்ன? சான்றுகள் தருக.
3. அணைவு
உப்பு இரட்டை உப்பிலிருந்து எவ்வகைகளில் வேறுபடுகின்றது?
4. ஈனிகள் மற்றும் அணைவு எண் என்றால் என்ன?
5. ஒருமுனை, இருமுனை
மற்றும் கொடுக்கு பிணைப்பு ஈனிகளுக்கு ஒவ்வொரு சான்று தருக.
6. பின்வரும் சேர்மங்களில் உள்ள மைய உலோக அயனியின் மின்சுமையை
கணக்கிடுக. a) [Fe(NH3)4Cl2]
NO3 b) Na[B(NO3)4]
7. பின்வரும் சேர்மங்களின் பெயர்களைத் தருக. a) [Co(NH3)5(H2O)]Cl3 b)
Na[B(NO3)4]
8. பின்வருவனவற்றின் வாய்ப்பாடுகள் மற்றும் அமைப்புகளைத் தருக.
a) டிரைஸ் (எத்திலின் டை அமின்) கோபால்ட்(III) அயனி
b) பென்டாஅம்மைன்சல்பேட்டோகோபால்ட்(III) குளோரைடு
9. சிஸ் மற்றும் டிரான்ஸ் [Pt(NH3)2Cl2] சேர்மங்களின் அமைப்புகளை வரைக.
10. கொடுக்கு
பிணைப்பு அணைவுகள் என்றால் என்ன?
சான்றுகள் தருக.ஒரு மதிப்பெண் ஐந்து மதிப்பெண்
No comments:
Post a Comment