May 12, 2012

திண்ம நிலைமை – II (Solid State – II) மூன்று மதிப்பெண்


1. ஒரு படிக CsCl - ல் எத்தனை அலகுகள் உள்ளன என்பதை கணக்கிடு. CsCl ஆனது BCC அமைப்புடையது
ஓர் அலகுக்கூட்டில் உள்ள சீசியம் (அல்லது குளோரைடு) அயனிகளின் எண்ணிக்கை
= Nc / 8 = 8 / 8 = 1
 ஓர் அலகுக்கூட்டில் உள்ள குளோரைடு (அல்லது சீசியம்) அயனிகளின் எண்ணிக்கை
= Nb / 1 = 1 / 1 = 1
எனவே, ஓர் அலகுக்கூட்டில் உள்ள CsCl அலகுகளின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.
2. கண்ணாடி எவ்வாறு உருவாகிறது?
சில நீர்மங்கள் விரைவாக குளிர்விக்கும்போது குறிப்பிட்ட வெப்பநிலையில் படிகங்களாவதில்லை. ஆனால் மெதுவாக குளிரவைக்கும்போது அவற்றின் பாகியல் தன்மை சீராக அதிகரித்து இறுதியில் கண்ணாடிச் சேர்மம் உருவாகிறது.
3. அ) sc ஆ) fcc இ) bcc அமைப்புகளின் படம் வரைக.
4. பிராக் விதியைக் கூறு
nλ = 2d sinθ
இதில்,
n = எதிரொளிப்பின் படி
λ = X - கதிர்களின் அலைநீளம்
d = படிகத்தில் உள்ள தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு
θ = எதிரொளிப்புக் கோணம்
5. அதிமின் கடத்திகள் என்றல் என்ன?
அதி குளிரவைக்கப்பட்ட சில சேர்மங்கள் எத்தகைய மின்தடையுமின்றி மின்சாரத்தை கடத்தும் செயல்முறை அதிமின் கடத்துதிறன் (superconductivity) எனப்படும். அதிமின் கடத்துதிறன் நிலையில் உள்ள ஒரு பொருளானது பூஜ்ஜிய மின்தடையை பெற்றுள்ளது. இப் பண்பை பெற்றுள்ள சேர்மங்கள் அதிமின் கடத்திகள் எனப்படுகின்றன.
6. விட்ரியஸ் நிலைமை என்றல் என்ன?
திட மற்றும் நீர்ம நிலைமைகளுக்கு இடையில் உள்ள நிலைமை
7. அதிமின் கடத்து நிலைமாறு வெப்பநிலை என்றல் என்ன?
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருளின் மின்தடையானது தி்டீரென பூஜ்ஜியத்தை அடைவது.
8. மூலக்கூறு படிகங்கள் பற்றி குறிப்பு வரைக.
1. மூலக்கூறு படிகங்களிலுள்ள அணிக்கோவை புள்ளிகளில் மின்சுமையற்ற மூலக்கூறுகள் அமைந்துள்ளன.
2. மூலக்கூறுகள் பிணைந்துள்ள விசைகள் இருவகைப்படும். அவை
(1) இருமுனை-இருமுனை கவர்ச்சி விசை மற்றும்
(2) வாண்டர்வால்ஸ் விசைகள்
3. இருமுனை-இருமுனை கவர்ச்சி விசை முனைவுற்ற மூலக்கூறுகளைக் கொண்டுள்ள படிகங்களில் காணப்படுகின்றன.
4. சான்று: நீர்
5. வாண்டர்வால்ஸ் விசைகள் பொதுவாக அனைத்து வகையான மூலக்கூறு படிகங்களிலும் காணப்படுகின்றன.
9. ப்ரெங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.
1. அணிக்கோவை புள்ளிகளின் இடைவெளியில் ஓர் அயனி நிரப்பப்படும் போது இத்தகைய குறைபாடு ஏற்படுகிறது.
2. இந்த வகை குறைபாடு பொதுவாக அயனிப்படிகங்களில் உள்ள எதிர்மின் அயனியின் உருவளவு நேர்மின் அயனியைவிட பெரியதாக இருக்கும்போது ஏற்படுகிறது.
3. இக்குறைபாட்டிற்கு சான்றாக AgBr எடுத்துக்கொள்ளலாம்
4. Ag+ அயனியில் ஒன்று அதனுடைய அணிக்கோவை புள்ளியில் அமையாமல் புள்ளிகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் அமைந்துள்ளது. இதனை படத்தில் காணலாம்.
5. நேர்மின் அயனிகளின் எண்ணிக்கையானது எதிர்மின் அயனிகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதால் படிகமானது நடுநிலையைப் பெற்றிருக்கிறது.
10. fcc அமைப்பில் அலகுக் கூட்டில் அணுக்கள் அமந்துள்ள விதம் பற்றி குறிப்பு வரைக.
முகப்பில் உள்ள அணு இரண்டு அலகுக்கூடுகளுக்கு பொதுவாக இருப்பதால், முகப்பு அணு 1/2 × Nf  வை ஒர் அலகுக்கூட்டிற்கு பகிர்ந்து கொள்கிறது.
Nf = என்பது முகப்பில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
முகப்பு மைய அமைப்பில் ஓர் அலகுக் கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
= Nc / 8 + Nf  / 2
= 8 / 8 + 6 / 2
= 1 + 3
= 4


11. அதிமின் கடத்திகளின் பயன்களைத் தருக
12. பிராக் சமன்பாட்டினை எழுதி விளக்குக
13. உலோகம் அதிகமுள்ள குறைபாடு பற்றி எழுதுக.
14. உலோகம் குறையும் குறைபாடு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
15. bcc அமைப்பில் அலகுக் கூட்டில் அணுக்கள் அமைந்துள்ள விதம் பற்றி குறிப்பு வரைக.
16. sc அமைப்பில் அலகுக் கூட்டில் அணுக்கள் அமைந்துள்ள விதம் பற்றி குறிப்பு வரைக.

1 comment:

  1. Sir,
    Supurb work. Rare in this materialistic world. Keep it up. God bless you.

    ReplyDelete