May 04, 2012

கரிம நைட்ரஜன் சேர்மங்கள் (Organic Nitrogen Compounds) ஒரு மதிப்பெண்

1. அனிலினும் எத்திலமினும் எந்த கரணியுடன் வினைபுரியும்போது வேறுபடுகிறது? 
அ) CH3I                                                   ஆ) CHCl3 + எரி பொட்டாஷ்
இ) HNO2                                                  ஈ) CH3COCl
2. அனிலீன், பென்சாயில் குளோரைடுடன் சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் வினைபுரிந்து பென்சனிலைடை ருகிறது. ந்த வினை  
அ) காட்டர்மேன் வினை                        ஆ) சாண்ட்மேயர் வினை
இ) ஸ்காட்டன் பௌமன் வினை           ஈ) காம்பெர்க் பெக்மேன் வினை
                       Cu2Cl2 / HCl
3. C6H5N2Cl         →         X; சேர்மம் X என்பது 
அ) C6H5NH2         ஆ) C6H5NHNH2           இ) C6H5-C6H5               ஈ) C6H5Cl
             
                        NaNO2 / HCl
4. C6H5NH2           →            X.  X என்பது 
                               273 K
 அ) C6H5Cl             ஆ) C6H5NHOH             இ) C6H5N2Cl                  ஈ) C6H5OH  
5. CCl3NO2 __________ க பயன்படுகிறது. / குளோரோ பிக்ரின் (CCl3NO2) பயன்
 அ) வெடி மருந்து                                        ஆ) சாயம் 
இ) மயக்க மருந்து                                      ஈ) நுண்ணுயிர்க் கொல்லி /
அ) மண் நுண்ணுயிர்க் கொல்லி            ஆ) கரிம தொகுப்பு முறை
இ) சிறந்த கரைப்பான்                            ஈ) எதிர் ஆக்சிஜனேற்றி
6. பென்சீன் டையசோனியம் குளோரைடை குளோரோபென்சீனாக மாற்றும் வினை 
 அ) சாண்ட்மேயர் வினை / காட்டர்மான் வினை      ஆ) ஸ்டீபன் வினை 
இ) காம்பெர்க் வினை                                                    ஈ) ஸ்காட்டன் பௌமன் வினை
7. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும் எலக்ட்ரான் கவர் கரணி  
அ) ஹைட்ரோனியம் அயனி (H3O+)                             ஆ) சல்போனிக் அமிலம்
இ) நைட்ரோனியம் அயனி (NO2+)                                ஈ) புரோமைடு அயனி
8. நைட்ரோ ல்கேன்களிலுள்ள –NO2 (நைட்ரோ) தொகுதியை –NH2 (ஓரிணைய அமினோ) தொகுதியாக மாற்றும் காரணி  
அ) Zn/NH4Cl            ஆ) Zn                          இ) Sn/HCl                            ஈ) Zn/NaOH
9. நைட்ரோ பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்தால் கிடைப்பது  
அ) o-டைநைட்ரோ பென்சீன்                     ஆ) 1, 3, 5-டிரைநைட்ரோ பென்சீன்
 இ) p-டைநைட்ரோ பென்சீன்                     ஈ) m-டைநைட்ரோ பென்சீன்
10. நைட்ரோ அசிநைட்ரோ இயங்கு சமநிலையைக் காட்டுகிறது
அ) நைட்ரோ மீத்தேன் / 2- நைட்ரோ புரோப்பேன் 
(ஓரிணைய & ஈரிணைய நைட்ரோ சேர்மம்) 
ஆ) நைட்ரோ பென்சீன்            இ) குளோரோ பிக்ரின்                 ஈ) o - டொலுவிடின் 
11. நைட்ரோ ல்கேன் அசிட்டால்டிஹைடுடன் குறுக்க வினையில் ஈடுபட்டு _______ ஐக் கொடுக்கிறது 
அ) நைட்ரோ புரப்பேன்                          ஆ) 1-நைட்ரோ-2-புரப்பனால்
 இ) 2-நைட்ரோ-1-புரப்பனால்                ஈ) 3-நைட்ரோ புரப்பனால்
12. எது டையசோ ஆக்கல் வினையில் ஈடுபடாது?  
அ) m-டொலுயிடீன்                                ஆ) அனிலின் 
இ) p-அமினோ பினால்                          ஈ) பென்சைல் அமின்
13. அனிலினை அமிலம் கலந்த K2Cr2O7 (பொட்டாசியம் டைகுரோமேட்) கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தால் கொடுப்பது 
அ) p- பென்சோ குயினோன்                 ஆ) பென்சாயிக் அமிலம் 
இ) பென்சால்டிஹைடு                           ஈ) பென்சைல் ஆல்கஹால்
14. ஓரிணைய அமின் செயல்படும் விதம்  
அ) எலக்ட்ரான் கவர் கரணி                  ஆ) லூயி காரம் 
இ) லூயி அமிலம்                                    ஈ) தனி உறுப்பு
15. அமின்களின் காரப்பண்பிற்குக் காரணம்  
அ) நான்முகி அமைப்பு                          ஆ) நைட்ரஜன் அணு இருப்பதால்
 இ) நைட்ரஜனிலுள்ள தனி எலக்ட்ரான் இரட்டை  
ஈ) நைட்ரஜனின் எலக்ட்ரான் கவர் தன்மை
அ) NH> CH3NH2 > (CH3)2NH                   ஆ) (CH3)2NH > CH3NH2 > NH3 
இ) CH3NH2 > (CH3)2NH > NH3                     ஈ) NH3 > (CH3)2NH > CH3NH2
17. இயங்கு சமநிலையைக் காட்டாத சேர்மம் 
அ) நைட்ரோ பென்சீன்                           ஆ) நைட்ரோ மீத்தேன் 
இ) நைட்ரோ த்தேன்                             ஈ) நைட்ரோ புரப்பேன்
18. பென்சீன் நைட்ரோ ஏற்ற வினையில் இடைநிலை பொருளாக கிடைக்கிறது 
அ) அர்ரீனியம் அயனி                             ஆ) கார்பன் எதிர் அயனி
இ) ஆக்சோனியம் அயனி                        ஈ) நைட்ரைட் அயனி 
19. நைட்ரோ பென்சீன் அடர். H2SO4 ல் மின்னாற்பகுப்பு செய்யும்போது உண்டாகும் இடைநிலை பொருள்  
அ) C6H5NH-NHC6H5                           ஆ) C6H5-NHOH 
இ) C6H5-N=N-C6H5                              ஈ) இவை அனைத்தும்
20. CH3CH2-N=O மற்றும் CH3CH2-O-N=O சேர்மங்கள் காட்டும் மாற்றியம்  
         
          O 
அ) இட மாற்றியம்                                    ஆ) சங்கிலித் தொடர் மாற்றியம்
இ) வினைத் தொகுதி மாற்றியம்             ஈ) இயங்குச் சமநிலை
21. CH3-N=O மற்றும் CH2=N-OH சேர்மங்கள் காட்டும் மாற்றியம்
                ↓                               ↓
                O                              O          
அ) இட மாற்றியம்                                    ஆ) சங்கிலித் தொடர் மாற்றியம்
இ) வினைத் தொகுதி மாற்றியம்              ஈ) இயங்குச் சமநிலை
22. சல்பா மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்  
அ) மெத்தில் அமீன்                                  ஆ) நைட்ரோ மீத்தேன்
இ) அமினோ பென்சீன் / அனிலின்         ஈ) நைட்ரோ பென்சீன்
23. கார்பைலமின் வினையில் ஈடுபடும் கரிமச் சேர்மம் எது?  
அ) (C2H5)2NH                                         ஆ) C2H5NH2 
இ) (C2H5)3N                                            ஈ) (C2H5)4 N+ I
24. நைட்ரோ பென்சீன் Zn/NaOH உடன் வினைப்பட்டு பெறப்படுகின்ற விளைபொருள்  
அ) அனிலின்                   ஆ) அசாக்சி பென்சீன்                 இ) அசோ பென்சீன் 
ஈ) ஹைட்ரசோ பென்சீன் / N, N'- டை பினைல் ஹைட்ரசீன் 
25. பென்சீன் டையசோனியம் குளோரைடு பென்சீன் உடன் சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் வினைபுரிதல்  
அ) பெர்கின்ஸ் வினை                             ஆ) காட்டர்மேன் வினை 
இ) சாண்ட்மேயர் வினை                          ஈ) காம்பெர்க் பெக்மேன் வினை
26. மூவிணைய நைட்ரோ சேர்மம் எது?  
அ) 2-நைட்ரோ புரப்பேன்                                  ஆ) 1-நைட்ரோ புரப்பேன்
 இ) 1-நைட்ரோ-2, 2-டை மெத்தில் புரப்பேன் ஈ) 2-நைட்ரோ-2- மெத்தில் புரப்பேன்
27. பென்சீன் டையசோனியம் குளோரைடை நீருடன் கொதிக்க வைத்தால் கிடைப்பது  
அ) பென்சைல் ஆல்கஹால்                      ஆ) பென்சீன் + N2
இ) பீனால்                                                  ஈ) பினைல் ஹைட்ராக்சிலமின்
28. நைட்ரோ மீத்தேனை Zn/NH4Cl கரைசல் கொண்டு ஒடுக்கினால் கிடைப்பது 
அ) CH3NH2                                             ஆ) C2H5NH2
இ) CH3NHOH                                         ஈ) C2H5COOH
29. எது மூவிணைய அமின்?  
அ) (CH3)3-C-NH2                                  ஆ) CH3 - CH (CH3) - NH - CH3
இ) (CH3)2-N-C2H5                                 ஈ) CH3-CH2- C (CH3) (C2H5) NH2
30. கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது?  
அ) அனிலின்                                           ஆ) நைட்ரோ மீத்தேன்
 இ) பென்சீன் சல்போனிக் அமிலம்      ஈ) நைட்ரோ பென்சீன்
31. கீழ்க்கண்டவற்றுள் எந்த நைட்ரோ சேர்மங்கள் அடர் காரத்தின் முன்னிலையில் அமிலத் தன்மை கொண்டதாக செயல்படுகின்றன?  
அ) ஓரிணைய          ஆ) ஈரிணைய         இ) மூவிணைய             ஈ) அ) மற்றும் ஆ)
32. கீழ்க்கண்டவற்றுள் எது ஹாஃப்மன் புரோமமைடு வினையில் ஈடுபடாது?  
அ) எத்தில் அமைடு                                 ஆ) புரப்பனமைடு
இ) மெத்தில் அமைடு                              ஈ) பினைல் மெத்தில் அமைடு
33. எது ஈரிணைய அமின்?  

அ) அனிலின்                                          ஆ) டைபினைல் அமீன் 

இ) ஈரிணைய பியூடைல் அமீன்           ஈ) மூவிணைய பியூடைல் அமீன்
 மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

1 comment: