May 17, 2012

மின் வேதியியல் - I (Electrochemistry – I) மூன்று மதிப்பெண்

1. மின்வேதி சமானத்தை வரையறு. அதன் அலகு என்ன?
ஓர் ஆம்பியர் மின்னோட்டத்தை ஒரு விநாடிக்கு (ஒரு கூலூம்) செலுத்தும்போது படியும் சேர்மத்தின் அளவு.
அலகு: கி.கி.கூலூம்–1 (kg.coulomb–1)
2. சமான கடத்துத்திறன் வரையறு. மேலும் அதன் கணிதவியல் சமன்பாடு தருக.
ஒரு கிராம் சமான நிறையை பெற்றுள்ள மின்பகுளி கரைசலின் கடத்துத்திறன் சமான கடத்துத்திறன் எனப்படும்.
கரைசலின் நியம கடத்துத்திறன் (κ) மற்றும் ஒரு கிராம் சமான நிறையையுடைய மின்பகுளி கரைசலின் கன அளவு (V) ஆகியவற்றின் பெருக்கற்பலன் சமான கடத்துத்திறனுக்கு சமமாகும்.
λc = κ x V
3. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடேயின் முதல் மற்றும் இரண்டாம் விதிகளை கூறு.
ஃபாரடேயின் முதல் விதி:
மின்னாற்பகுத்தலின் போது மின்வாயில் வெளிப்படும் பொருளின் நிறையானது (m) மின்பகுளியின் வழியே செலுத்தப்படும் மின்னோட்டத்தின் அளவிற்கு (Q) நேர்விகிதத்திலிருக்கும். m ∝ Q
ஃபாரடேயின் இரண்டாம் விதி:
வெவ்வேறு மின்பகுளிகளின் வழியே ஒரேஅளவு மின்னோட்டாத்தை செலுத்தும்போது, மின்வாய்களில் வெளிப்படும் பொருள்களின் அளவுகள் அவற்றின் வேதிச் சமானங்களுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
4. கோல்ராஷ் விதியை கூறு.
அளவிலா நீர்த்தலில் மொத்த மின்பகுளியின் அயனியாக்கம் நிறைவுற்ற பிறகு, ஒவ்வொரு அயனியும் தன்னிச்சையாக நகருகிறது. மேலும் ஒவ்வொரு அயனியும் மின்பகுளியின் மொத்த கடத்துத்திறனுக்கு குறிப்பிட்ட மதிப்பு கடத்துத்திறனைக் கொடுக்கின்றது.
5. ஆஸ்வால்டின் நீர்த்தல் விதியை கூறு.
ஆஸ்வால்டின் நீர்த்தல் விதி வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை மாறிலியை பிரிகை வீதம் மற்றும் அதன் செறிவுடன் தொடர்புபடுத்துகிறது.
அல்லது
 Ka = α 2C / (1 - α) என்பது ஆஸ்வால்டின் நீர்த்தல் விதியாகும்
இதில்,
Ka = வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை மாறிலி
  α = பிரிகை வீதம்
  C = வலிமை குறைந்த மின்பகுளியின் செறிவு
6. 10 ஆம்பியர் மின்னோட்டத்தை 2 மணி 40 நிமிடங்கள் மற்றும் 50 விநாடிகள் நேரத்திற்கு செலுத்தும்போது 9.65 கி. பொருள் வீழ்படிவாகிறது. பொருளின் மின்வேதி சமான நிறையை கணக்கிடு.
மின்வாயில் வெளிப்படும் பொருளின் நிறை, m = 9.65 கி
செலுத்தப்பட்ட மின்னோட்டத்தின் அளவு, I = 10 ஆம்பியர்
நேரம், t = 2 மணி 40 நிமிடங்கள் மற்றும் 50 விநாடிகள்
             = [(2 x 60 x 60) + (40 x 60) + 50] விநாடிகள்
             = [7200 + 2400 + 50]
             = 9650 விநாடிகள்
பொருளின் மின்வேதி சமான நிறை, Z = ?
          Z = m / I x t
பயன்படுத்தப்படும் மின்னோட்டத்தின் அளவு Q = I x t = 10 x 9650 = 96500 கூலூம்
96500 கூலூம் மின்னோட்டத்தில் வீழ்படிவான பொருளின் அளவு = 9.65 கிராம்
1 கூலூம் மின்னோட்டத்தில் வீழ்படிவான பொருளின் அளவு
= மின்வேதி சமான நிறை, Z
= சமான நிறை / 96500
= 9.65 கிராம் / 96500 கூலூம்
            = 0.0001 கிராம் கூலூம் –1
            = 1 x 10– 4 கிராம் கூலூம் –1
            = 1 x 10–7 கி.கி.கூலூம்–1
7. தாங்கல் கரைசல் என்றால் என்ன? அதன் வகைகளை கூறு. சான்று தருக.
தாங்கல் கரைசல் என்பது சிறிதளவு அமிலம் அல்லது காரத்தை சேர்க்கும்போது கரைசலின் pH மாற்றமல் இருப்பதேயாகும்.
மாறாக,  ஒரு தாங்கல் கரைசல் pH மாறுவதை தடுக்க முயல்கிறது. அதாவது சிறிதளவு அமிலம் அல்லது காரத்தை தாங்கல் கரைசலுடன் சேர்க்கும்போது pH மிகச் சிறிதளவே மாறுகிறது.
இரண்டு பொதுவா தாங்கல் கரைசல்கள்:
1. வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதே அமிலத்தின் வலிமை மிகுந்த காரத்தின் உப்பு. இவை அமில தாங்கல் கரைசல்கள் எனப்படும்.
சான்று: CH3COOH + CH3COONa.
2. வலிமை குறைந்த காரம் மற்றும் அதன் வலிமை மிகுந்த அமிலத்தின் உப்பு. இவை கார தாங்கல் கரைசல்கள் எனப்படும்.
சான்று: NH4OH + NH4Cl.
8. பொது அயனி விளைவு என்றால் என்ன? சான்று தருக.
ஓர் உப்பின் பிரிகை வீதம் பொது அயனியை சேர்ப்பதால் குறைவது பொது அயனி விளைவு எனப்படும்.
சான்று:
திண்ம NH4Cl ஐ NH4OH கரைசலுடன் சேர்க்கும்போது சமநிலை
NH4OH ⇌ NH4+ + OH
இடதுபுறம் நகர்கிறது. எனவே, OH ன் சமநிலைச் செறிவு குறைகிறது.
9. வெப்பநிலை உயர்த்தும் போது உலோகங்களின் கடத்துத்திறன் குறைகிறது. ஏன்?
வெப்பநிலை உயரும் போது உலோக அணுக்களின் அதிர்வு அதிகரிப்பதால் கடத்துத்திறன் குறைகிறது.


10. நீரின் அயனிப்பெருக்கம் என்றால் என்ன? அதன் மதிப்பை தருக

11. நிறங்காட்டிகள் என்றால் என்ன? சான்று தருக.

12. வரையறு மோலார் கடத்துத்திறன். அதன் அலகை குறிப்பிடுக

13. ஹென்டர்சன் சமன்பாட்டின் மூன்று முக்கியத்துவத்தையும் எழுதுக.

14. ஆக்சாலிக் ஆமிலத்தை சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம் பார்க்கும்போது பயன்படுத்தும் நிறங்காட்டி  எதுஉன் பதிலைசரியான காரணத்துடன் நியாயப்படுத்துக.  
15. கரைசல்களின் pH - வரையறு


அலகு – 14 மின் வேதியியல் - II
1. திட்ட ஒடுக்க மின் அழுத்தங்கள் Fe3+ / Fe மற்றும் Fe2+ / Fe அரைகலன்களுக்கு முறையே – 0.035 V மற்றும்  – 0.44 V ஆகும். எனில் எந்த ஏற்றவினை எளிதில் நடைபெறும்? Fe3+ / Fe அல்லது Fe2+ / Fe.
2. எதிர்மின்வாய் மற்றும் நேர்மின்வாய்களில் மின்னாற்பகுப்பு கலன்களிலும், வேதிமின்கலன்களிலும்  ஏற்படும் மாற்றங்கள் யாவை?
3. கீழ்க்கண்ட கல வினைக்கான மின்கல அமைப்பினைத் தருக. Zn(s) + 2AgNO3 --> 2Ag(s) + Zn(NO3)2.
4. திட்ட ஒடுக்க மின் அழுத்தம் Fe3+, Fe2+ / Pt = + 0.771 V எனில் எந்த அரை மின்கலத்துடன் மேற்சொன்ன  அரைகலத்தை இணைக்கும்போது e.m.f = 0.771 V ஆக இருக்கும்.
5. Cl (aq) / AgCl(s) Ag அரைகலத்தின் அரைகல வினையை எழுதுக.
6. இரண்டுவகை மின்கலங்கள் யாவை?
7. தனி மின்வாய் மின் அழுத்தம் என்றால் என்ன?
8. ஒரு மின்கலத்தின் திட்ட மின் அழுத்தத்தை வரையறு.
9. ஒரு மின்கல வினையை எவ்வாறு முன்கூட்டி அறிவிப்பாய்?
10. நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை எழுதுக.
ஒரு மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

2 comments: