May 08, 2012

p - தொகுதித் தனிமங்கள் – II (p – Block Elements – II) மூன்று மதிப்பெண்

1. A) PCl5 B) H3PO3 BQ¯ÁØÔß Aø©¨ø£ ÁøµP.
2. பாஸ்பாரிக் அமிலம் ஆய்வகத்தில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
குளிர்விப்பானுடன் கூடிய குடுவையில் சிவப்பு பாஸ்பரஸையும் 50% நைட்ரிக் அமிலத்தையும் எடுத்துக்கொண்டு நீர்த் தொட்டியில் வைத்து நைட்ரஜன் ஆக்ஸைடுகள் வெளியேறும் வரை கொதிக்க வைக்கப்பட்டு பாஸ்பாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
அயோடின் வினைவேகமாற்றியாக செயல்படுகிறது. 453 K வெப்பநிலைக்கு குறைவாக ஆவியாக்கி பின் வெற்றிட உலர்த்தும் கலனில் எடுத்துக்கொண்டு உறைகலவை சூழ வைத்து குளிர்வித்தால் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் படிகங்களாக படிகிறது.
                   I2
P +5HNO3 → H3PO4 +5NO2 + H2O
3. பொட்டாஷ் படிகாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
1. அலுநைட் அல்லது படிகாரக்கல் (K2SO4. Al2(SO4)3. 4Al(OH)3).
2. இது நன்கு தூளாக்கப்பட்டு நீர்த்த. H2SO4 உடன் சேர்த்து கொதிக்க வைக்கப்படுகிறது.
3. அப்பொழுது Al(OH)3 பகுதி Al2(SO4)3 ஆக மாறுகிறது.
4. இதனுடன் ணக்கிடப்பட்ட அளவு K2SO4 சேர்த்து படிகாரம் படிகமாக்கப்படுகிறது.
4. செனான் ஃப்ளுரைடு சேர்மங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
Xe மற்றும் ஃப்ளுரினை சரியான சூழலில் நேரடியாக வினைபுரியச்செய்து XeF2, XeF4, மற்றும் XeF6 என்ற மூன்று வகையான ஃப்ளுரைடு சேர்மங்களையும் பெறலாம்.
           673K
Xe+F2 → XeF2
              673K
Xe + 2F2  → XeF4
            573K
Xe+ 3F2  → XeF6
செனானையும், ஃப்ளுரினையும் சூரிய ஒளி அல்லது மெர்க்குரி மின் வில்லிலிருந்து பெறப்பட்ட ஒளியின் முன்னிலையிலோ வெப்பப்படுத்த XeF2 கிடைக்கிறது.
5.  P2O5 ஒரு மிகச்சிறந்த நீர் நீக்கும் கரணி என்பதை நிரூபீ.
சல்ஃபியூரிக்அமிலம், நைட்ரிக் அமிலம் உட்பட பல கனிமச் சேர்மங்களிலிருந்தும் கரிமச் சேர்மங்களிலிருந்தும் பாஸ்பரஸ் பென்டாக்சைடு நீரை நீக்குகிறது.
          P4O10
H2SO4 → SO3 + H2O
           P4O10
2HNO3 → N2O5 + H2O
             P4O10
RCONH2 → RCN + H2O
6. H3PO3 ஒரு சிறந்த ஒடுக்கும் கரணியாக செயல்படுகிறது என்பதற்கு சான்று தருக.
P-H பிணைப்பு இருப்பதால் H3PO3 ஒரு சிறந்த ஒடுக்கும் கரணியாக செயல்படுகிறது. சில்வர் நைட்ரேட்டை சில்வராக ஒடுக்குகிறது.
2AgNO3 +  H3PO3 + H2O → 2Ag + H3PO4 +2HNO3
7. ஹேலஜன் இடைச் சேர்மங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
ஒரு ஹேலஜன் மற்றொரு ஹேலஜனுடன் சேர்ந்து பல சேர்மங்களை உருவாக்குவதற்கு ஹேலஜன் இடைச் சேர்மங்கள் என்று பெயர்.
ஹேலஜன் இடைச் சேர்மங்கள்
1. ஹேலஜன்கள் நேரடியாக கூடி உண்டாக்குகின்றன அல்லது
2. AX, AX3, AX5, AX7 போன்ற குறை ஹேலஜன் இடைச் சேர்மங்களுடன் ஹேலஜன் சேர்த்து உயர் ஹேலஜன் இடைச் சேர்மங்களை பெறலாம்.
                                        473K
Cl2+ F2 (சம கன அளவு) → 2ClF (AX வகை)
                                        573K
Cl2 + 3F2 (அதிக அளவு) → 2ClF3 (AX3 வகை)
Br2 + 5F2 (அதிக அளவு) → 2BrF5 (AX5 வகை)
                                      573K
IF5 + F2 (அதிக அளவு) → IF7 (AX7 வகை)
8. பிளம்போ சால்வன்சி (Plumbo solvency) பற்றி குறிப்பு எழுதுக.
காற்றில்லா சூழ்நிலையில் லெட் தூய நீரினால் பாதிக்கப்படாது. ஆனால் நீரில் காற்று கரைந்து இருப்பின், கரையும் தன்மை பெற்ற, நச்சு தன்மை கொண்ட லெட் ஹைட்ராக்ஸைடு தருகிறது. இதுவே “பிளம்போ கரைப்பான் தன்மை” என அழைக்கப்படுகிறது.
2Pb + O2 + 2H2O → 2Pb(OH)2
9. குறிப்பு எழுதுக - ஹோல்ம்ஸ் முன்னறிவிப்பான்.
1. துளையிடப்பட்டுள்ள பெட்டியினுள் கால்சியம் பாஸ்பைடு மற்றும் கால்சியம் கார்பைடு நிரப்பி கடலில் எறியப்படுகிறது.
2. நீர் பெட்டியினுள் துளை வழியாக நுழைந்து கால்சியம் பாஸ்பைடு மற்றும் கால்சியம் கார்பைடுடன் வினைபுரிந்து அசிட்டிலீனையும் பாஸ்பீனையும் தருகிறது.
Ca3P2 + 6H2O → 2PH3↑ + 3Ca(OH)2
CaC2   + 2H2O → C2H2↑ + Ca(OH)2
3. பாஸ்பீன் காற்றுடன் உடனடியாக எரிந்து அசிட்டிலீனையும் எரியச்செய்கிறது. சிவப்பு நிறச் சுவாலையுடன் பாஸ்பீன் எரிவதால் உண்டாகும் பெரும்புகையும் சேர்ந்துகொள்கிறது. இது கடலில் உள்ள கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக பயன்படுகிறது.
10. புளோரினின் ஆக்ஸிஜனேற்ற திறன் பற்றி கூறுக.
1. எலக்ட்ரான் நாட்டம் அதிகமாக இருப்பதால் ஃப்ளுரின் ஒரு சிறந்த அக்ஸிஜனேற்றும் கரணி.
2. இது மற்ற ஹேலைடு அயனிகளை ஹேலஜன்களாக அவற்றின் கரைசலிலோ அல்லது உலர்ந்த நிலையிலோ ஆக்ஸிஜனேற்றம் செய்கிறது.
F2 + 2X  → 2F  + X2 (X  = Cl , Br , I)
3. ஃப்ளுரினிலிருந்து அயோடின் வரை ஆக்ஸிஜனேற்ற பண்பு குறைகிறது.
4. அணு எண் குறைவாக உள்ள ஹேலஜன்கள், அணு எண் அதிகமாக உள்ள ஹேலைடு அயனிகளை ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்கின்றன.
11. ஹீலியத்தின் பயன்களை எழுதுக.
1. மிகவும் லேசானதாகவும், எரியும் தன்மையற்றதாகவும் இருப்பதால் ஹீலியம் பலூன்களில் அடைக்கப்பட்டு வானிலையை அறியப் பயன்படுகிறது.
2. மிகவும் லேசானதாக இருப்பதால் ஆகாய விமானங்களின் டயர்களில் நிரப்புவதற்கு ஹீலியம் பயன்படுகிறது.
3. ஹீலியம்-ஆக்ஸிஜன் கலவை ஆழ்கடல் நீந்துபவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
4. ஆஸ்துமாவை குணப்படுத்த ஹீலியம்-ஆக்ஸிஜன் கலவை பயன்படுத்தப்படுகிறது.
5. குறை வெப்பநிலையில் சோதனைகள் செய்வதற்கு நீர்ம ஹீலியம் (கொதிநிலை 4.2K) கிரையோசெனிக் கரணியாக (cryogenic agent) பயன்படுகிறது.
6. NMR நிறமாலையிலும், மருத்துவத்துறையில் பயன்படும் MRI (Magnetic Resonance Imaging) ஸ்கேன் (Scan) போன்றவற்றில் பயன்படுத்தக் கூடிய அதிவேக கடத்தும் திறனுள்ள மின்காந்தங்கள் தயாரிக்க இது பயன்படுகிறது.
12. நியானின் பயன்களை எழுதுக.
1. விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் குழல் விளக்குகளில் (discharge tubes) பயன்படுகிறது.
2. அதிக மின்னழுத்தத்திலிருந்து மின் சாதனங்களை பாதுகாக்க ஹீலியத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
3. மூடுபனியினுள் ஊடுருவிச்செல்லும் பண்பை பெற்றிருப்பதால் ஆகாய விமானங்கள் உயர்ந்த மலையின் மீது மேதாமல் இருக்க  மலையின் மீது பொருத்துகின்ற விளக்குகளில் பயன்படுகிறது.
4. இது தாவரங்கள் வளர்வதைத் தூண்டுவதாலும், குளோரோபில் உருவாக பயன்படுவதாலும் நியான்விளக்குகள்  தாவரத் தோட்டங்களில் பயன்படுகிறது.
13. H3PO3 இருகாரத்துவம்  உடையது. ஏன்?
H3PO3, NaOH போன்ற காரங்களுடன் வினைபுரிந்து  இரண்டு விதமான உப்புகளைத் தருகிறது.
H3PO3 +  NaOH → NaH2PO3 + H2O
H3PO3 + 2NaOH → Na2HPO3 + 2H2O
14. பாஸ்பாரிக் அமிலம், H3PO4 முக்காரத்துவமுடையது. நிரூபீ.
பாஸ்பாரிக் அமிலம், H3PO4, NaOH போன்ற காரங்களுடன் வினைபுரிந்து  மூன்று வகையான உப்புகளைத் தருகிறது.
H3PO4 +  NaOH → NaH2PO4 + H2O 
H3PO4 + 2NaOH → Na2HPO4 + 2H2O
H3PO4 + 3NaOH → Na3PO4 + 3H2O
15. பாஸ்பரஸ் அமிலத்தை வெப்பப்படுத்தும் பொழுது நிகழ்வதென்ன?
பாஸ்பரஸ் அமிலத்தை வெப்பப்படுத்தும் பொழுது தானே ஆக்சிஜனேற்ற ஒடுக்கமடைந்து பாஸ்பாரிக் அமிலத்தையும் பாஸ்பீனையும் தருகிறது.
                Δ
4H3PO3 → 3H3PO4 + PH3
16. மந்த இணை விளைவு என்றால் என்ன?
1. s-ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான்கள் வேதிப்பிணைப்பிற்கு உட்படாமல் p-ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான்கள் மட்டும் உட்படுவது.
அல்லது
s-ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான்கள் வேதிப்பிணைப்பிற்கு உட்படாதது.
2. தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அணு எண் அதிகரிப்பிற்கு ஏற்றவாறு மந்த இணை விளைவு அதிகரிகிறது.
17. ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலத்தை வெப்பப்படுத்தும் பொழுது நிகழ்வதென்ன?
ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலத்தை வெப்பப்படுத்தும் பொழுது 523 K வெப்பநிலையில் பைரோ பாஸ்பாரிக் அமிலத்தையும் 589 K வெப்பநிலையில் மெட்டா பாஸ்பாரிக் அமிலத்தையும் தருகிறது.
            523K           589K
2H3PO4 → H4P2O7 → 2HPO3 + H2O
            – H2O
18. HF ஐ கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாது. என்? சமன்பாடுகளை எழுதுக.
HF சிலிகா மற்றும் சிலிகேட்டுடன் வினைபுரியும் அல்லது
HF கண்ணாடியை அரிக்கும்.
Na2SiO3 + 6HF → Na2SiF6 + 3H2O
SiO2 + 4HF → SiF4 + 2H2O


19. ப்ளுரினின் பயன்களை எழுதுக.
20. எரிக்கப்பட்ட படிகாரம் என்றால் என்ன?
21. ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம், H3PO4 சில்வர் நைட்ரேட்டுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
22. லெட்டின் பயன்களை எழுதுக
23. பாஸ்பீன் ஒரு சிறந்த ஒடுக்கும் கரணி என்பதை நிரூபீ
24. பொட்டாஷ் படிகாரத்தின் பயன்களை எழுது
25. ClF, ClF3, IF7 ஆகிய சேர்மங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
26. ஆர்கானின் பயன்களை எழுதுக.
27. பஸ்பரஸின் ஒரு ஆக்ஸிஅமிலம் முக்காரத்துவம் உடையதுசேர்மத்தைக் கண்டறிந்து அதன் எலக்ட்ரான்புள்ளி வாய்பாட்டை வரைக. 
28. IF7 மற்றும் ClF3 - ன்அமைப்பை வரைக.

ஒரு மதிப்பெண்  ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment