March 15, 2015

ஆன்லைன் சோதனை - உயிர் வேதிமூலக்கூறுகள் - TM


+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.
  1. ஒரு டைபெப்டைடில் இல்லாதது
  2. இரண்டு பெப்டைடு அலகுகள்
    இரண்டு அமினோ அமிலப்பகுதிகள்
    ஒரு அமைடு தொகுதி
    உப்பு போன்றதொரு அமைப்பு

  3. குளுகோஸ் எதனால் குளுகோனிக் அமிலமாக மாற்றப்படாது?
  4. Br2/H2O
    ஃபெலிங்கு கரைசல்
    டாலன் கரணி
    அடர் HNO3

  5. குளுகோஸ் பிரிடின் முன்னிலையில், அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைபுரிந்து தருவது
  6. மானோஅசிடேட்டு
    டைஅசிடேட்டு
    பென்டா அசிடேட்டு
    வினை இல்லை

  7. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள்
  8. லிபிடு
    செல்லுலோஸ்
    புரதம்
    விட்டமின்

  9. சுக்ரோசின் எதிர் சுழற்சி மாற்றம் என்பது
  10. சுக்ரோசு ஏற்றமடைதல்
    சுக்ரோசு ஒடுக்கம் அடைதல்
    சுக்ரோசு, குளுகோசு மற்றும் ஃப்ரக்டோசாக சிதைதல்
    சுக்ரோசு பலபடியாதல்

  11. எதிர் சுழற்சி சர்க்கரை என்பது சம அளவு
  12. D (+) குளுகோசும், சுக்ரோசும்
    D (–) ஃப்ரக்டோசும், சுக்ரோசும்
    D (+) குளுகோசும், D (–) ஃப்ரக்டோசும்
    ஃப்ரக்டோசும், மால்டோசும்

  13. _________________ இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது
  14. கொழுப்பு மற்றும் எண்ணெய்
    செஃபாலின்
    கிளைகோலிபிடுகள்
    லெசிதின்

  15. சம அளவில் D (+) குளுகோசும், D (–) ஃப்ரக்டோசும் உள்ள கரைசலை என _____________________ அழைக்கிறோம்
  16. கனி சர்க்கரை
    எதிர் சுழற்சி சர்க்கரை
    கரும்புச் சர்க்கரை
    சர்க்கரை இல்லாதவை

  17. புரதங்கள் என்பவை
  18. பாலிபெப்டைடுகள்
    பலபடி அமிலங்கள்
    பலபடி ஃபீனால்கள்
    பாலி எஸ்டர்கள்

  19. சார்பிட்டால், மானிட்டால் இரண்டும்
  20. ஐசோமர்கள்
    பாலிமர்கள்
    எபிமர்கள்
    டைமர்கள்

  21. சுக்ரோசில் குளுகோசும், ஃப்ரக்டோசும் பிணைக்கப்பட்டிருப்பது?
  22. C1 – C1
    C1 – C2
    C1 – C4
    C1 – C6

  23. சீர்மையற்ற கார்பனைக் கொண்டிராத அமினோ அமிலம்
  24. அலனின்
    கிளைசின்
    புரோலின்
    தைரோசின்

  25. புரதங்களின் கட்டுமான மூலக்கூறுகள்
  26. α - ஹைடிராக்சி அமிலம்
    α - அமினோ அமிலம்
    β - ஹைடிராக்சி அமிலம்
    β - அமினோ அமிலம்

  27. கார்போஹைடிரேட்டுகளிலேயே மிக அதிகமாக கிடைப்பது
  28. குளுகோஸ்
    ஃப்ரக்டோஸ்
    ஸ்டார்ச்சு
    செல்லுலோஸ்

  29. ஒளிசுழற்சி தன்மையற்ற அமினோ அமிலம்
  30. கிளைசின்
    அலனின்
    புரோலின்
    பினைல் அலனின்

  31. புரதம் வீழ்ப்படிவாதல், ___________________ என்றும் அழைக்கப்படுகிறது
  32. கூழ்மமாக்குதல்
    தன் இயல்பை இழத்தல்
    தன் இயல்பைத் திரும்பப் பெறுதல்
    இவற்றுள் எதுவுமில்லை

  33. ஒடுக்கும் சர்க்கரையை தேர்ந்தெடு
  34. சுக்ரோசு
    செல்லுலோசு
    குளுகோசு
    ஸ்டார்ச்சு

  35. புரதங்களின் நீராற்பகுப்பில் இறுதியாக விளைவது
  36. அனிலின்
    அலிஃபாடிக் அமிலம்
    அமினோ அமிலம்
    அரோமேடிக் அமிலம்

  37. ஸ்டார்ச் 200 – 250oC, வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது கிடைப்பது
  38. டெக்ஸ்டிரின்
    கராமல்
    பார்லி சர்க்கரை
    செல்லுலோஸ்

  39. அமினோ அமிலத்திற்குப் பொருத்தமில்லாதது எது?
  40. இருமுனை அயனி
    சம மின் புள்ள
    ஈரியல்புத் தன்மை
    NaOH கரைசலில் கரையாத தன்மை

  41. ஒடுக்கும் பண்புடைய டைசாக்கரைடு / இரட்டை சர்க்கரை
  42. குளுகோசு
    ஃப்ரக்டோஸ்
    சுக்ரோசு
    லாக்டோஸ்

  43. _______________ மூளை மற்றும் எல்லா நரம்பு திசுக்களிலும் காணப்படும் வெண்படலத்தில் உள்ளவை
  44. லெசிதின்
    செஃபாலின்
    காலக்டோ லிபிடுகள்
    அமினோ அமிலம்

  45. செஃபாலின்கள்__________________ ல் முக்கிய பங்கு வகிக்கிறது
  46. வளர்சிதை மாற்றத்தில்
    உடற்கூறுகளை நிர்ணயித்தலில்
    இரத்தத்தை தூய்மைப்படுத்துதலில்
    இரத்தம் உறைதலில்

  47. சமையல் எண்ணெயை காரம் கொண்டு நீராற்பகுத்தால் கிடைப்பது
  48. சோப்பு
    கிளிசரால்
    கொழுப்பு அமிலம்
    (அ) மற்றும் (ஆ)

  49. சமையல் எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்பு அமிலம்?
  50. அசிடிக் அமிலம்
    ஸ்டியரிக் அமிலம்
    பென்சாயிக் அமிலம்
    ஆக்சாலிக் அமிலம்

  51. தன் இயல்பை இழத்தல் என்பது எது அல்ல?
  52. புரதத்திலுள்ள ஹைடிரஜன் பிணைப்பு முறிவடைதல்
    புரதத்தின் உடலியல் செயல்திறன் இழத்தல்
    இரண்டாம் நிலை அமைப்பு இழத்தல்
    முதலாம் நிலை அமைப்பு இழத்தல்

  53. நகம் மற்றும் முடியில் உள்ளது
  54. செல்லுலோஸ்
    கொழுப்பு
    கிராட்டின்
    லிபிடு

  55. புரதங்கள் எதனால் பாதிக்கப்படாது?
  56. அமிலம்
    காரம்
    உயர்வெப்பநிலை
    நீர்

  57. என்சைம்களின் குறிப்பிட்டு செயலாற்றும் திறன் எதனால்?
  58. அமினோ அமிலங்களின் வரிசை
    இரண்டாம் நிலை அமைப்பு
    மூன்றாம் நிலை அமைப்பு
    மேற்சொன்னதெல்லாம்

  59. கீழ்க்காண்பனவற்றுள் எது சுக்ரோசுக்கு பொருத்தமானதல்ல?
  60. இரட்டை சர்க்கரை
    ஒடுக்கா சர்க்கரை
    நீராற்பகுப்பில் குளுகோசை மட்டும் கொடுக்கிறது
    நீராற்பகுப்படைந்து குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோசைக் கொடுக்கிறது

  61. A மற்றும் B - அமினோ அமிலங்கள் வினைபுரிந்து கொடுப்பது
  62. இரண்டு டைபெப்டைடுகள்
    மூன்று பெப்டைடுகள்
    நான்கு டைபெப்டைடுகள்
    ஒரே ஒரு டைபெப்டைடு

  63. எதில் டிரை கிளிசரைடு அடங்கியுள்ளது?
  64. மெழுகு
    சமையல் எண்ணெய்
    சாறு எண்ணெய்
    ஆல்புமின்

  65. எதில் நெடிய சங்கிலி எஸ்டர் உள்ளது?
  66. மெழுகு
    சமையல் எண்ணெய்
    டர்பென்டைன் எண்ணெய்
    செல்லுலோஸ்

  67. கீழ்க்கண்டவற்றுள் எது ஒற்றைச் சர்க்கரை?
  68. சுக்ரோசு
    செல்லுலோசு
    மால்டோசு
    குளுகோஸ்

  69. எது நிறைவுள்ள கொழுப்பு அமிலம் அல்ல?
  70. பால்மிடிக் அமிலம்
    ஸ்டியரிக் அமிலம்
    ஓலியிக் அமிலம்
    கிளிசரிக் அமிலம்

  71. கீழ்க்கண்டவற்றுள் எதில் லிபிடு உள்ளது?
  72. ஸ்டார்ச்சு
    கனிம எண்ணெய்
    தாவர எண்ணெய்
    பெப்டைடு

  73. குளுகோசு + அசிட்டிக் அமில நீரிலி + உலர் சோடியம் அசிடேட்டு -----> _______?
  74. டைஅசிடேட்டு
    டெட்ரா அசிடேட்டு
    பென்டா அசிடேட்டு
    ஹெக்சா அசிடேட்டு

  75. _______________ பிராணிகள் மற்றும் தாவரங்களின் மேல் பரப்பை பாதுகாக்கிறது
  76. கார்போஹைடிரேட்டுகள்
    விட்டமின்கள்
    உட்கரு அமிலங்கள்
    மெழுகுகள்
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                               English Medium

ஆன்லைன் சோதனை - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. அனிலினும் எத்திலமினும் கீழ்க்கண்ட எந்த கரணியுடன் வினைபுரியும்போது வேறுபடுகிறது?
  2. CH3I
    CHCl3 + எரிபொட்டாஷ்
    HNO2
    CH3COCl

  3. அனிலீன், பென்சாயில் குளோரைடுடன் சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் வினைபுரிந்து பென்சனிலைடை தருகிறது. இந்த வினை
  4. காட்டர்மேன் வினை
    சாண்ட்மேயர் வினை
    ஸ்காட்டன் பௌமன் வினை
    காம்பெர்க் பெக்மேன் வினை

                         Cu2Cl2 / HCl
  5. C6H5N2Cl ---------------→ X; சேர்மம் X என்பது
  6. C6H5NH2
    C6H5NHNH2
    C6H5–C6H5
    C6H5Cl

                        NaNO2/HCl
  7. C6H5NH2 ---------------→ X. X என்பது
  8.                      273K – 278K
    C6H5Cl
    C6H5NHOH
    C6H5N2Cl
    C6H5OH

  9. குளோரோ பிக்ரினின் (CCl3NO2) பயன்
  10. வெடிமருந்து
    சாயம்
    மயக்க மருந்து
    நுண்ணுயிர் கொல்லி

  11. பென்சீன் டையசோனியம் குளோரைடை குளோரோ பென்சீனாக மாற்றும் வினை
  12. சாண்ட்மேயர் வினை / காட்டர்மேன் வினை
    ஸ்டீபன் வினை
    காம்பெர்க் வினை
    ஸ்காட்டன் பௌமன் வினை

  13. பென்சினை நைட்ரோ ஏற்றம் செய்யும் எலக்ட்ரான் கவர் கரணி
  14. ஹைடிரோனியம் அயனி
    சல்போனிக் அமிலம்
    நைட்ரோனியம் அயனி
    புரோமைடு அயனி

  15. நைட்ரோ ஆல்கேன்களிலுள்ள – NO2 தொகுதியை – NH2 தொகுதியாக மாற்றும் கரணி
  16. Zn / NH4Cl
    Zn துகள்
    Sn / conc. HCl
    Zn / NaOH

  17. நைட்ரோ பென்சினை நைட்ரோ ஏற்றம் செய்தால் கிடைப்பது
  18. o- டைநைட்ரோ பென்சீன்
    1, 3, 5 டிரை நைட்ரோ பென்சீ
    p- டைநைட்ரோ பென்சீன்
    m- டைநைட்ரோ பென்சீன்

  19. நைட்ரோ அசிநைட்ரோ இயங்குச் சமநிலையைக் காட்டுகிறது
  20. நைட்ரோ மீத்தேன்
    நைட்ரோ பென்சீன்
    குளோரோ பிக்ரின்
    o- டொலுவிடின்

  21. நைட்ரோ ஆல்கேன் அசிட்டால்டிஹைடுடன் குறுக்கவினையில் ஈடுபட்டு ___________________ கொடுக்கிறது
  22. நைட்ரோபுரப்பேன்
    1-நைட்ரோ-2-புரப்பனால்
    2-நைட்ரோ-1-புரப்பனால்
    3-நைட்ரோபுரப்பனால்

  23. மிர்பேன் எண்ணெய் எனப்படுவது
  24. நைட்ரோ பென்சீன்
    பென்சால்டிஹைடு
    மீத்தைல் சாலிசிலேட்
    ஆஸ்பிரின்

  25. எது டையசோ ஆக்கல் வினையில் ஈடுபடாது?
  26. m- டொலுயிடீன்
    அனிலின்
    p- அமினோ பினால்
    பென்சைல் அமின்

  27. அனிலினை அமிலம் கலந்த K2Cr2O7 கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தால் கொடுப்பது
  28. p- பென்சோகுயினோன்
    பென்சாயிக் அமிலம்
    பென்சால்டிஹைடு
    பென்சைல் ஆல்கஹால்

  29. ஓரிணைய அமின் செயல்படும் விதம்
  30. எலக்ட்ரான் கவர் கரணி
    லூயி காரம்
    லூயி அமிலம்
    தனி உறுப்பு

  31. அமின்களின் காரப் பண்பிற்குக் காரணம்
  32. நான்முகி அமைப்பு
    நைட்ரஜன் அணு இருப்பதால்
    நைட்ரஜனிலுள்ள தனி எலக்ட்ரான் இரட்டை
    நைட்ரஜனின் உயர் எலக்ட்ரான் கவர் தன்மை

  33. அமீன்களின் ஒப்பு கார வலிமை வரிசை
  34. NH3 > CH3NH2 > (CH3)2NH
    (CH3)2NH > CH3NH2 > NH3
    CH3NH2 > (CH3)2NH > NH3
    NH3 > (CH3)2NH > CH3NH2

  35. எலக்ட்ரான் கவர் நைட்ரோ ஏற்ற வினையில் மிகவும் வீரியமிக்க சேர்மம்
  36. மெத்தில் பென்சீன் / டொலுவின்
    பென்சீன்
    பென்சாயிக் அமிலம்
    நைட்ரோ பென்சீன்

  37. இயங்குச் சமநிலையைக் காட்டாத சேர்மம்
  38. நைட்ரோ பென்சீன்
    நைட்ரோ மீத்தேன்
    நைட்ரோ ஈத்தேன்
    2-நைட்ரோபுரப்பேன்

  39. பென்சீன் நைட்ரோ ஏற்ற வினையில் இடைநிலை பொருளாக கிடைக்கிறது.
  40. அர்ரீனியம் அயனி
    கார்பன் எதிர் அயனி
    ஆக்சோனியம் அயனி
    நைட்ரைட் அயனி

  41. நைட்ரோ பென்சீன் அடர். H2SO4 ல் மின்னாற்பகுப்பு செய்யும்போது உண்டாகும் இடைநிலை பொருள்
  42. C6H5NH–NHC6H5
    C6H5–NHOH
    C6H5–N=N–C6H5
    இவை அனைத்தும்

  43. CH3 – CH2 – NO2 மற்றும் CH3 CH2 – O – N = O சேர்மங்கள் காட்டும் மாற்றியம
  44. இடமாற்றியம்
    சங்கிலித் தொடர் மாற்றியம்
    வினைத் தொகுதி மாற்றியம்
    இயங்குச் சமநிலை

  45. CH3 – N = O மற்றும் CH2 = N – OH சேர்மங்கள் காட்டும் மாற்றியம்
                ↓                                   ↓
                O                                  O
    இடமாற்றியம்
    சங்கிலித் தொடர் மாற்றியம்
    வினைத் தொகுதி மாற்றியம்
    இயங்குச் சமநிலை

  46. சல்பா மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்
  47. மெத்தில் அமீன்
    நைட்ரோ மீத்தேன்
    அமினோ பென்சீன் / அனிலின்
    நைட்ரோ பென்சீன்

  48. கார்பைலமின் வினையில் ஈடுபடும் கரிமச் சேர்மம்
  49. (C2H5)2NH
    C2H5NH2
    (C2H5)3N
    (C2H5)4N+I–

  50. நைட்ரோ பென்சீன் Zn / NaOH உடன் வினைப்பட்டு பெறப்படுகின்ற விளைபொருள்
  51. அனிலின்
    அசாக்ஸி பென்சீன்
    அசோ பென்சீன்
    ஹைட்ரசோ பென்சீன்

  52. எது மூவிணைய அமின்?













  53. கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது?
  54. அனிலின்
    நைட்ரோ மீத்தேன்
    பென்சீன் சல்போனிக் அமிலம்
    நைட்ரோ பென்சீன்

  55. கீழ்க்கண்டவற்றுள் எது அதிகக் காரத்தன்மை உடையது?
  56. அம்மோனியா
    மெத்திலமீன்
    டைமெத்திலமீன்
    அனிலீன்

  57. கீழ்க்கண்டவற்றுள் எந்த நைட்ரோ சேர்மங்கள் அடர் காரத்தின் முன்னிலையில் அமிலத்தன்மை கொண்டதாக செயல்படுகின்றன?
  58. ஓரிணைய
    ஈரிணைய
    மூவிணைய
    (அ) மற்றும் (ஆ)

  59. கீழ்க்கண்டவற்றுள் எது ஹாஃப்மன் புரோமமைடு வினையில் ஈடுபடாது?
  60. எத்தில் அமைடு
    புரப்பனமைடு
    மெத்தில் அமைடு
    பினைல் மெத்தில் அமைடு

  61. எது ஈரிணைய அமின்?
  62. அனிலீன்
    டைபினைல் அமீன்
    ஈரிணைய பியூடைல் அமின்
    மூவிணைய பியூடைல் அமீன்

  63. குளோரோ பிக்ரின் என்பது :
  64. CCl3CHO
    CCl3NO2
    CHCl3
    CH3NO2

  65. புரோமோ ஈத்தேன் வெள்ளி நைட்ரைட்டுடன் வினைபுரிந்து கொடுப்பது
  66. C2H5NO2
    C2H5–O–NO
    C2H5Ag + NaBr
    C2H5NC

  67. சோடியம் மற்றும் ஆல்கஹாலால், CH3 – CH2 – C ≡ N ஐ ஒடுக்கம் செய்தால் கிடைப்பது
  68. CH3 – CH NH2– CH3
    CH3 – CH2 – CH2 – OH + N2
    CH3 – CH2 – CH2 – NH2
    CH3 – CH2 – NH2

  69. பென்சீன் டையசோனியம் குளோரைடு பென்சீன் உடன் சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் வினைபுரிதல்
  70. பெர்கின்ஸ் வினை
    காட்டர்மேன் வினை
    சாண்ட்மேயர் வினை
    காம்பெர்க் பெக்மேன் வினை

  71. மூவிணைய நைட்ரோ சேர்மம் எது?
  72. 2-நைட்ரோ புரப்பேன்
    1-நைட்ரோ புரப்பேன்
    1-நைட்ரோ-2, 2-டைமெத்தில் புரப்பேன்
    2-நைட்ரோ-2-மெத்தில் புரப்பேன்

  73. பென்சீன் டையசோனியம் குளோரைடை நீருடன் கொதிக்க வைத்தால் கிடைப்பது
  74. பென்சைல் ஆல்கஹால்
    பென்சீன் + N2
    பினால்
    பினைல் ஹைடிராக்சிலமின்

  75. நைட்ரோ மீத்தேனை Zn / NH4Cl கரைசல் கொண்டு ஒடுக்கினால் கிடைப்பது
  76. CH3NH2
    C2H5NH2
    CH3NHOH
    C2H5COOH

  77. மெத்தில் ஐசோ சயனைடை LiAlH4 கொண்டு ஒடுக்கம் செய்வதால் கிடைப்பது
  78. மெத்தில் அமீன்
    எத்தில் அமீன்
    டை மெத்தில் அமீன்
    ட்ரை மெத்தில் அமீன்

  79. C6H5–NO2C6H5 –NH2 இம்மாற்றத்திற்கு பயன்படாத கரணி எது?
  80. Sn / HCl
    LiAIH4
    H2 / Ni
    Zn / NaOH

  81. ஓரிணைய அலிஃபாட்டிக் அமீன், குளோரோஃபார்ம் ஆல்கஹால் கலந்த KOH ஆகியவைகளுக்கிடையே உள்ள வினையின் பெயர்
  82. கேப்ரியல் வினை
    கடுகு எண்ணெய் வினை
    கார்பைல் அமீன் வினை
    ஹாஃப்மன் வினை
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                               English Medium