March 15, 2015

ஆன்லைன் சோதனை - உயிர் வேதிமூலக்கூறுகள் - TM


+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.
  1. ஒரு டைபெப்டைடில் இல்லாதது
  2. இரண்டு பெப்டைடு அலகுகள்
    இரண்டு அமினோ அமிலப்பகுதிகள்
    ஒரு அமைடு தொகுதி
    உப்பு போன்றதொரு அமைப்பு

  3. குளுகோஸ் எதனால் குளுகோனிக் அமிலமாக மாற்றப்படாது?
  4. Br2/H2O
    ஃபெலிங்கு கரைசல்
    டாலன் கரணி
    அடர் HNO3

  5. குளுகோஸ் பிரிடின் முன்னிலையில், அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைபுரிந்து தருவது
  6. மானோஅசிடேட்டு
    டைஅசிடேட்டு
    பென்டா அசிடேட்டு
    வினை இல்லை

  7. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள்
  8. லிபிடு
    செல்லுலோஸ்
    புரதம்
    விட்டமின்

  9. சுக்ரோசின் எதிர் சுழற்சி மாற்றம் என்பது
  10. சுக்ரோசு ஏற்றமடைதல்
    சுக்ரோசு ஒடுக்கம் அடைதல்
    சுக்ரோசு, குளுகோசு மற்றும் ஃப்ரக்டோசாக சிதைதல்
    சுக்ரோசு பலபடியாதல்

  11. எதிர் சுழற்சி சர்க்கரை என்பது சம அளவு
  12. D (+) குளுகோசும், சுக்ரோசும்
    D (–) ஃப்ரக்டோசும், சுக்ரோசும்
    D (+) குளுகோசும், D (–) ஃப்ரக்டோசும்
    ஃப்ரக்டோசும், மால்டோசும்

  13. _________________ இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது
  14. கொழுப்பு மற்றும் எண்ணெய்
    செஃபாலின்
    கிளைகோலிபிடுகள்
    லெசிதின்

  15. சம அளவில் D (+) குளுகோசும், D (–) ஃப்ரக்டோசும் உள்ள கரைசலை என _____________________ அழைக்கிறோம்
  16. கனி சர்க்கரை
    எதிர் சுழற்சி சர்க்கரை
    கரும்புச் சர்க்கரை
    சர்க்கரை இல்லாதவை

  17. புரதங்கள் என்பவை
  18. பாலிபெப்டைடுகள்
    பலபடி அமிலங்கள்
    பலபடி ஃபீனால்கள்
    பாலி எஸ்டர்கள்

  19. சார்பிட்டால், மானிட்டால் இரண்டும்
  20. ஐசோமர்கள்
    பாலிமர்கள்
    எபிமர்கள்
    டைமர்கள்

  21. சுக்ரோசில் குளுகோசும், ஃப்ரக்டோசும் பிணைக்கப்பட்டிருப்பது?
  22. C1 – C1
    C1 – C2
    C1 – C4
    C1 – C6

  23. சீர்மையற்ற கார்பனைக் கொண்டிராத அமினோ அமிலம்
  24. அலனின்
    கிளைசின்
    புரோலின்
    தைரோசின்

  25. புரதங்களின் கட்டுமான மூலக்கூறுகள்
  26. α - ஹைடிராக்சி அமிலம்
    α - அமினோ அமிலம்
    β - ஹைடிராக்சி அமிலம்
    β - அமினோ அமிலம்

  27. கார்போஹைடிரேட்டுகளிலேயே மிக அதிகமாக கிடைப்பது
  28. குளுகோஸ்
    ஃப்ரக்டோஸ்
    ஸ்டார்ச்சு
    செல்லுலோஸ்

  29. ஒளிசுழற்சி தன்மையற்ற அமினோ அமிலம்
  30. கிளைசின்
    அலனின்
    புரோலின்
    பினைல் அலனின்

  31. புரதம் வீழ்ப்படிவாதல், ___________________ என்றும் அழைக்கப்படுகிறது
  32. கூழ்மமாக்குதல்
    தன் இயல்பை இழத்தல்
    தன் இயல்பைத் திரும்பப் பெறுதல்
    இவற்றுள் எதுவுமில்லை

  33. ஒடுக்கும் சர்க்கரையை தேர்ந்தெடு
  34. சுக்ரோசு
    செல்லுலோசு
    குளுகோசு
    ஸ்டார்ச்சு

  35. புரதங்களின் நீராற்பகுப்பில் இறுதியாக விளைவது
  36. அனிலின்
    அலிஃபாடிக் அமிலம்
    அமினோ அமிலம்
    அரோமேடிக் அமிலம்

  37. ஸ்டார்ச் 200 – 250oC, வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது கிடைப்பது
  38. டெக்ஸ்டிரின்
    கராமல்
    பார்லி சர்க்கரை
    செல்லுலோஸ்

  39. அமினோ அமிலத்திற்குப் பொருத்தமில்லாதது எது?
  40. இருமுனை அயனி
    சம மின் புள்ள
    ஈரியல்புத் தன்மை
    NaOH கரைசலில் கரையாத தன்மை

  41. ஒடுக்கும் பண்புடைய டைசாக்கரைடு / இரட்டை சர்க்கரை
  42. குளுகோசு
    ஃப்ரக்டோஸ்
    சுக்ரோசு
    லாக்டோஸ்

  43. _______________ மூளை மற்றும் எல்லா நரம்பு திசுக்களிலும் காணப்படும் வெண்படலத்தில் உள்ளவை
  44. லெசிதின்
    செஃபாலின்
    காலக்டோ லிபிடுகள்
    அமினோ அமிலம்

  45. செஃபாலின்கள்__________________ ல் முக்கிய பங்கு வகிக்கிறது
  46. வளர்சிதை மாற்றத்தில்
    உடற்கூறுகளை நிர்ணயித்தலில்
    இரத்தத்தை தூய்மைப்படுத்துதலில்
    இரத்தம் உறைதலில்

  47. சமையல் எண்ணெயை காரம் கொண்டு நீராற்பகுத்தால் கிடைப்பது
  48. சோப்பு
    கிளிசரால்
    கொழுப்பு அமிலம்
    (அ) மற்றும் (ஆ)

  49. சமையல் எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்பு அமிலம்?
  50. அசிடிக் அமிலம்
    ஸ்டியரிக் அமிலம்
    பென்சாயிக் அமிலம்
    ஆக்சாலிக் அமிலம்

  51. தன் இயல்பை இழத்தல் என்பது எது அல்ல?
  52. புரதத்திலுள்ள ஹைடிரஜன் பிணைப்பு முறிவடைதல்
    புரதத்தின் உடலியல் செயல்திறன் இழத்தல்
    இரண்டாம் நிலை அமைப்பு இழத்தல்
    முதலாம் நிலை அமைப்பு இழத்தல்

  53. நகம் மற்றும் முடியில் உள்ளது
  54. செல்லுலோஸ்
    கொழுப்பு
    கிராட்டின்
    லிபிடு

  55. புரதங்கள் எதனால் பாதிக்கப்படாது?
  56. அமிலம்
    காரம்
    உயர்வெப்பநிலை
    நீர்

  57. என்சைம்களின் குறிப்பிட்டு செயலாற்றும் திறன் எதனால்?
  58. அமினோ அமிலங்களின் வரிசை
    இரண்டாம் நிலை அமைப்பு
    மூன்றாம் நிலை அமைப்பு
    மேற்சொன்னதெல்லாம்

  59. கீழ்க்காண்பனவற்றுள் எது சுக்ரோசுக்கு பொருத்தமானதல்ல?
  60. இரட்டை சர்க்கரை
    ஒடுக்கா சர்க்கரை
    நீராற்பகுப்பில் குளுகோசை மட்டும் கொடுக்கிறது
    நீராற்பகுப்படைந்து குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோசைக் கொடுக்கிறது

  61. A மற்றும் B - அமினோ அமிலங்கள் வினைபுரிந்து கொடுப்பது
  62. இரண்டு டைபெப்டைடுகள்
    மூன்று பெப்டைடுகள்
    நான்கு டைபெப்டைடுகள்
    ஒரே ஒரு டைபெப்டைடு

  63. எதில் டிரை கிளிசரைடு அடங்கியுள்ளது?
  64. மெழுகு
    சமையல் எண்ணெய்
    சாறு எண்ணெய்
    ஆல்புமின்

  65. எதில் நெடிய சங்கிலி எஸ்டர் உள்ளது?
  66. மெழுகு
    சமையல் எண்ணெய்
    டர்பென்டைன் எண்ணெய்
    செல்லுலோஸ்

  67. கீழ்க்கண்டவற்றுள் எது ஒற்றைச் சர்க்கரை?
  68. சுக்ரோசு
    செல்லுலோசு
    மால்டோசு
    குளுகோஸ்

  69. எது நிறைவுள்ள கொழுப்பு அமிலம் அல்ல?
  70. பால்மிடிக் அமிலம்
    ஸ்டியரிக் அமிலம்
    ஓலியிக் அமிலம்
    கிளிசரிக் அமிலம்

  71. கீழ்க்கண்டவற்றுள் எதில் லிபிடு உள்ளது?
  72. ஸ்டார்ச்சு
    கனிம எண்ணெய்
    தாவர எண்ணெய்
    பெப்டைடு

  73. குளுகோசு + அசிட்டிக் அமில நீரிலி + உலர் சோடியம் அசிடேட்டு -----> _______?
  74. டைஅசிடேட்டு
    டெட்ரா அசிடேட்டு
    பென்டா அசிடேட்டு
    ஹெக்சா அசிடேட்டு

  75. _______________ பிராணிகள் மற்றும் தாவரங்களின் மேல் பரப்பை பாதுகாக்கிறது
  76. கார்போஹைடிரேட்டுகள்
    விட்டமின்கள்
    உட்கரு அமிலங்கள்
    மெழுகுகள்
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                               English Medium

2 comments: