March 14, 2015

ஆன்லைன் சோதனை - ஈதர்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. லூயியின் அமில, கார கொள்கையின்படி, ஈதர்கள் _______________ தன்மையுடையது
  2. அமில
    கார
    நடுநிலை
    ஈரியல்பு

  3. ஒரு கரிமச்சேர்மம் C4H10O அதிக அளவு HI உடன் வெப்பப்படுத்த ஒரே ஒரு வகை ஆல்கைல் அயோடைத் தருகிறது.
  4. டைஎத்தில் ஈதர்
    மெத்தில் -n-புரோப்பைல் ஈதர்
    மெத்தில் ஐசோபுரோப்பைல் ஈதர்
    n- பியூட்டைல் ஆல்கஹால்

  5. அனிசோல் புரோமோ ஏற்றத்தின்போது _______________ ஐத் தருகிறது
  6. m- புரோமோ அனிசோல்
    o- புரோமோ அனிசோல்
    o- & p- புரோமோ அனிசோல்
    பென்சோயிக் அமிலம்

  7. டைஎத்தில் ஈதர் செயல்படும் விதம்
  8. லூயி அமிலம்
    லூயி காரம்
    நடுநிலைச் சேர்மம்
    பிரான்ஸ்டட் அமிலம்

  9. டைஎத்தில் ஈதரை சிதைப்பதற்குகந்த கரணி
  10. HI
    KMnO4
    NaOH
    H2O

  11. ஆல்காக்சைடை, ஆல்கைல் ஹாலைடுடன் வினைப்படுத்தி ஈதரைப் பெறலாம். இதுவே
  12. ஹாப்மன் வினை
    வில்லியம்சன் தொகுத்தல்
    ஊர்ட்ஸ் வினை
    கோல்பின் வினை

  13. ஈதர்களை உலரும் வரை வெப்பப்படுத்தக்கூடாது. ஏனெனில்
  14. வெடிக்கும் பெராக்ஸைடு உண்டாக்குகிறது
    நீரில் கரைவதில்லை
    மந்தத் தன்மை உடையவை
    நீரை விட இலேசானது

  15. குறைந்த கரியணுக்களைக் கொண்ட ஈதர்களிலிருந்து உயர் கரியணுக்களைக் கொண்ட ஈதர்களை ____________ உடன் வினைப்படுத்தி பெறலாம்
  16. அடர். H2SO4
    AgOH
    சோடியம் ஆல்காக்ஸைடு
    கிரிக்னார்டு வினைப்பொருள்

  17. மூலக்கூறு வாய்பாடு C4H10O க்கு சாத்தியமான ஈதர் மாற்றியங்களின் எண்ணிக்கை
  18. 7
    5
    4
    3

  19. ஈதரின் ஆக்சிஜன் அணு
  20. மிகுவினை வீரியமிக்கது
    பதிலீடு செய்யப்பட்டது
    ஆக்சிஜனேற்றும் தன்மை
    மந்தத் தன்மையுடையது

  21. எத்தனாலுடன் கலந்து பெட்ரோலுக்குப் பதில் பயன்படுத்தப்படும். சேர்மம்
  22. மீத்தாக்சி மீத்தேன்
    ஈத்தாக்சி ஈத்தேன்
    மெத்தனேல்
    எத்தனேல்

  23. ஃபினடோலின் IUPAC பெயர்
  24. பீனாக்சி பென்சீன் ஈதர்
    ஈதாக்சி பென்சீன்
    மீத்தாக்சிபென்சீன்
    புரப்பாக்சி பென்சீன்

  25. கீழ்க்கண்ட எதற்கு வில்லியம்சன் தொகுத்தல் ஒரு சான்று?
  26. கருக்கவர் சேர்க்கை வினை
    எலக்ட் ரான் கவர் சேர்க்கை வினை
    எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
    கருக்கவர் பதிலீட்டு வினை

  27. ஈதரை காற்றில் சில மணி நேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள்
  28. பெராக்ஸைடு
    TNT
    சூபர் ஆக்சைடு
    ஆக்சைடு

  29. எத்தில் அயோடைடு, உலர் சில்வர் ஆக்சைடுடன் எதை உண்டாக்குகிறது?
  30. எத்தில் ஆல்கஹால்
    டைஎத்தில் ஈதர்
    சில்வர் ஈதாக்சைடு
    எத்தில் மெத்தில் ஈதர்

  31. கீழ்க்காண்பனவற்றுள் எது சீர்மையற்ற ஈதர்?
  32. C6H5–O–C6H5
    C2H5–O–C2H5
    CH3–O –CH3
    C6H5–O –CH3

  33. 413 K ல் அடர். H2SO4 உடன் வெப்பப்படுத்தும் போது ________________ ஈதரை உருவாக்குகிறது
  34. கரிம அமிலம்
    ஆல்டிஹைடு
    ஆல்கஹால்
    கீட்டோன்

  35. கீழ்க்கண்டவற்றுள் எது வாசனைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது?
  36. டைமெத்தில் ஈதர்
    டைஎத்தில் ஈதர்
    எத்தில் மெத்தில் ஈதர்
    மெத்தில் பினைல் ஈதர்

  37. கீழ்க்காண்பனவற்றுள் எது எளிய ஈதர்?
  38. CH3 – O – C2H5
    C2H5 – O – CH3
    C2H5 – O – C2H5
    C3H7 – O – C2H5

  39. ஜெய்சல் முறையில் ஆல்கலாய்டுகளில் உள்ள ஆல்காக்சி தொகுதியை கண்டறியப் பயன்படும் வினையில் ஈதர் ____________ உடன் வினைபுரிகிறது
  40. HI
    Cl2
    P
    நீர்த்த. HCl

  41. சூரிய ஒளி முன்னிலையில் டைஎதில் ஈதர் குளோரினுடன் வினைபுரிந்து தரும் சேர்மம்
  42. α - குளோரோ டைஎத்தில் ஈதர்
    α, α’ - டைகுளோரோ டைஎத்தில் ஈதர்
    பெர்குளோரோ டைஎத்தில் ஈதர்
    (அ) மற்றும் (ஆ) இரண்டும்

  43. மூலக்கூறுகளுக்கிடையே ஹைடிரஜன் பிணைப்பு கீழ்க்காண்பனவற்றுள் எதில் இல்லை?
  44. CH3 – COOH
    C2H5 – O – C2H5
    CH3 – CH2 – OH
    C2H5 – NH2

  45. ஈதரில் உள்ள ஆக்ஸிஜன் வலிமை மிக்க அமிலங்களுடன் ___________ அடைந்து ஆக்சோனியம் உப்பை தருகிறது
  46. எலக்ட்ரான் ஏற்றம்
    புரோட்டான் ஏற்றம்
    புரோட்டான் நீக்கம்
    நீர் நீக்கம்

  47. CH3 – O – CH – CH3 இதன் IUPAC பெயர்:
                        |
                       CH3
  48. 1- மீத்தாக்சி புரப்பேன்
    மெத்தில் ஐசோபுரப்பைல் ஈதர்
    ஐசோபுரப்பைல் மெத்தில் ஈதர்
    2- மீத்தாக்சி புரப்பேன்

  49. C2H5OC2H5 மற்றும் CH3 – O – CH – CH3 வெளிப்படுத்தும் மாற்றியம
  50.                                                            |
                                                              CH3
    வினைச்செயல் தொகுதி
    இணைமாற்றியம்
    இடம்
    சங்கிலித் தொடர்

  51. அனிசோல் புரோமினேற்றம் அடைந்து கிடைப்பது
  52. o - புரோமோ அனிசோல்
    m - புரோமோ அனிசோல்
    p - புரோமோ அனிசோல்
    (அ) மற்றும் (இ)
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                          English Medium

No comments:

Post a Comment