March 14, 2015

ஆன்லைன் சோதனை - மின்வேதியியல் – I - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. CH3COOH ன் சமான கடத்துத்திறன் 25oC ல் 80 ஓம் –1 செ.மீ2 சமானம் –1 மற்றும் அளவிலா நீர்த்தலில் 400 ஓம் –1 செ.மீ2 சமானம் –1. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம் __________________
  2. 1
    0.2
    0.1
    0.3

  3. பாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது ___________________
  4. நேர்மின் அயனியின் அணு எண்
    எதிர்மின் அயனியின் அணு எண்
    மின்பகுளியின் சமான எடை
    நேர்மின் அயனியின் வேகம்

  5. ஆக்சாலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம் பார்க்கும்போது, பயன்படுத்தப்படும் நிறங்காட்டி _____________________
  6. பொட்டாசியம் பெர்மாங்கனேட்
    பினால்ப்தலீன்
    லிட்மஸ்
    மெத்தில்ஆரஞ்சு

  7. 0.2 ஆம்பியர் மின்னோட்டத்தை 50 நிமிடங்கள் செலுத்தும்போது 0.1978 கி காப்பர் வீழ்படிவாகிறது எனில், 600 கூலூம் மின்னோட்டத்தில் எவ்வளவு காப்பர் வீழ்படிவாகும்?
  8. 19.78 g
    1.978 g
    0.1978 g
    197.8 g

  9. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி பின்வரும் எதற்கு பொருந்தக்கூடியது?
  10. CH3COOH
    NaCl
    NaOH
    H2SO4

  11. அம்மோனியம் ஹைட்ராக்சைடை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் தரம்பார்க்கும்போது, பயன்படுத்தப்படும் நிறங்காட்டி __________________
  12. KMnO4
    மெத்தில்ஆரஞ்சு
    பினால்ப்தலீன்
    லிட்மஸ்

  13. 0.1 N NaOH உள்ள கரைசலின் pH ____________________
  14. 1
    10–1
    13
    10–13

  15. 10–6 M ஒற்றை கார அமிலத்தை ஒரு லிட்டர் கரைப்பானில் கரைத்தபிறகு கரைசலின் pH
  16. 6
    7
    4
    6 ஐ விட குறைவு

  17. ஒரு கூலூம் மின்னோட்டத்தை ஒரு மின்பகுளி கரைசல் வழியே செலுத்தும்போது மின்வாயில் படியும் பொருளின் நிறை _________________
  18. சமான நிறை
    மூலக்கூறு எடை
    மின்வேதிச் சமான எடை
    ஒரு கிராம்

  19. ஒரு கரைசலின் pH = 2 எனில் அதில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் செறிவு மோல் / லிட்டரில் ___________________
  20. 1 x 10–12
    1 x 10–4
    1 x 10–7
    1 x 10–2

  21. சோடியம் அசிட்டேட்டை அசிட்டிக் அமிலத்துடன் சேர்க்கும்போது, அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம் ____________________
  22. உயருகிறது
    குறைகிறது
    மாறாமல் உள்ளது
    பூச்சியமாகிறது

  23. சிறிதளவு அமிலம் அல்லது காரத்தை சேர்க்கும்போது ஒரு கரைசலில் pH மாறவில்லையெனில் அந்த கரைசல் ______________________
  24. தாங்கல் கரைசல்
    உண்மை கரைசல்
    ஐசோஹைட்ரிக் அமிலம்
    நல்லியல்பு கரைசல்

  25. அமில-கார தரம் பார்த்தலில் பயன்படுத்தப்படும் நிறங்காட்டிகள்
  26. வலிமை மிகு கரிம அமிலங்கள்
    வலிமை மிகு கரிம காரங்கள்
    வலிமை குறை கரிம அமிலங்கள்
    மின்பகுளியல்லாதவை

  27. NH4OH ஒரு வலிமைகுறை காரம் ஏனெனில் __________________
  28. குறைந்த அழுத்தத்தை உடையது
    பகுதியாக அயனியாகிறது
    முழுவதுமாக அயனியாகிறது
    குறைந்த அடர்த்தியுடையது

  29. வலிமை குறை அமிலம் மற்றும் உப்பு உள்ள தாங்கல் கரைசலின் ஹைட்ரஜன் அயனி செறிவு
  30. [H+] = Ka[உப்பு]/[அமிலம் ]
    [H+] = Ka[உப்பு]
    [H+] = Ka[அமிலம்]
    [H+] = Ka[உப்பு]/[அமிலம்]

  31. முதலில் மின்னாற்பகுத்தல் விதிகளை வகுத்தவர் __________________
  32. டால்டன்
    பாரடே
    கெக்குலே
    அவகாட்ரோ

  33. மின்னோட்டத்தை செலுத்துவதால் வேதிமாற்றம் நிகழும் செயல் _______
  34. நடுநிலையாக்கல்
    நீராற்பகுத்தல்
    மின்னாற்பகுத்தல்
    அயனியாக்கல்

  35. 0.01M KCl கரைசலின் நியம கடத்துதிறன் 25oC ல் 0.0014 ஓம் –1செ.மீ –1. அதன் சமான கடத்துதிறன்
  36. 14 ஓம் –1 செ.மீ 2 சமானம் –1
    140 ஓம் –1 செ.மீ 2 சமானம் –1
    1.4 ஓம் –1 செ.மீ 2 சமானம் –1
    0.14 ஓம் –1 செ.மீ 2 சமானம் –1

  37. பிரிகைவீதம் α மற்றும் C செறிவு உள்ள ஒரு இரட்டை மின்பகுளிக்கு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி
  38. K = (1– α)C/ α
    K = α2C/ 1–α
    K = (1– α)C/α2
    K = α2C/ (1–α)C

  39. பின்வரும் எந்த தொடர்பு சரியானது?
  40. pH =1 / [H+]
    pH = log10 [H+]
    log10 pH = [H+]
    pH = log10 1 / [H+]

  41. ஒரு வலிமை மிகுந்த அமிலத்தை வலிமை மிகுந்த காரத்துடன் நடுநிலையாக்கும்போது ஏற்படும் என்தால்பி மதிப்பு
  42. – 87.32 kJ equiv– 1
    – 57.32 kJ equiv– 1
    – 72.57 kJ equiv– 1
    – 77.23 kJ equiv– 1

  43. HCl மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம் பார்த்தலில் பயன்படும் நிறங்காட்டி
  44. பொட்டாசியம் பெர்மாங்கனேட்
    பினால்ப்தலீன்
    லிட்மஸ்
    மெத்தில்ஆரஞ்சு
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment